Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » கவர்ச்சி உடையில் மல்லாக்கப் படுத்து செம கிளாமர் போஸ் கொடுத்த அதிதி ராவ்!

கவர்ச்சி உடையில் மல்லாக்கப் படுத்து செம கிளாமர் போஸ் கொடுத்த அதிதி ராவ்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகை அதிதி ராவ். பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹேய் சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

அசாத்திய நடிப்புக்கு நிகராக கவர்ச்சியையும் அள்ளித் தெளிக்கும் அதிதி இப்பொழுது மல்லாக்கப் படுத்துக் கொண்டு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள அதிதி ராவ் முதன் முதலில் ஸ்ரீங்காரம் என்ற தமிழ் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இப்படம் தேசிய விருதையும் வென்றுள்ளது. அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த அதிதி ராவ் 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

ஏர்போர்ஸ் ஆபீஸருக்கும் ராணுவத்தில் பணிபுரியும் மருத்துவருக்கும் இடையேயான கட்டுக்கடங்காத காதலை ஆழமாக காட்டியிருந்த காற்று வெளியிடையில் அதிதி ராவ் நடிப்பை பலரும் பாராட்டினர்.மேலும் அந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதையும் அதிதி பெற்றார். காற்று வெளியிடைக்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த அதிதி ராவ் அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

Aditi Rao Hydari red dress

தமிழ்,இந்தியை தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வரும் அதிதி ராவ் கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இதில் மற்றுமொரு கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வசூலை அள்ளிய ஆர்எக்ஸ் 100 படத்தை இயக்கிய அஜய் பூபதி இப்பொழுது பிரம்மாண்ட பொருட்செலவில் மஹா சமுத்திரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இரண்டு காதல் கதைகள் கொண்ட இப்படத்தில் சித்தார்த் மற்றும் சர்வானந்த் ஹீரோக்களாக நடிக்க ஜோடியாக அதிதி ராவ் மற்றும் அனு இமானுவேல் நடிக்கின்றனர். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இவ்வாறு தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அதிதி சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் இவர் இப்பொழுது கடல்கன்னி போல மினுக்கும் முறையில் பளபளக்கும் தேகத்தை காட்டிக்கொண்டு நாற்காலியில் மல்லாக்கப் படுத்தவாறு செம கிக்காக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Aditi Rao Hydari hot pic
aditi rao sits in chair