September 29, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » பங்களாவில் திருட்டுத்தனமாக நடந்த சரக்கு பார்ட்டி.. பிரபல நடிகை கைது!

பங்களாவில் திருட்டுத்தனமாக நடந்த சரக்கு பார்ட்டி.. பிரபல நடிகை கைது!

மகாராஷ்ட்ராவில் தொடர்ந்து போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த ஞாயிறன்று ரகசியமாக சொகுசு பங்களா ஒன்றில் நடந்த சரக்கு பார்ட்டியில் அதிரடியாக போலீசார் ரெய்டு நடத்தினர்.

அதில், பிக் பாஸ் மராத்தி பிரபலம் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

heena panchal

மகாராஷ்ட்ராவில் போதைப் பொருள் புழக்கம் சினிமா பிரபலங்கள் மத்தியில் தலைவிரித்து ஆடுகிறது. முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரியா சக்கரவர்த்தி என பலரது பெயர்களும் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக சரக்கு பார்ட்டி ஒன்று நடைபெற்றது.

பாலிவுட் நடிகர்கள், பிக் பாஸ் பிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் என பல பேர் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ள தகவல் போலீசுக்கு தெரியவந்ததை அடுத்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை இட்டனர். அங்கு அனுமதியின்றி பார்ட்டி நடத்தப்பட்டதும் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது.

heena panchal viral

பிக் பாஸ் பிரபலங்கள், பாலிவுட் நடிகர்கள், கலைஞர்கள் உள்பட 22 பேரை போலீசார் அந்த பார்ட்டியில் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக மகாராஷ்ட்ரா போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதில், பிக் பாஸ் மராத்தி போட்டியாளர் ஹீனா பாஞ்சலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதாகும் பிரபல மராத்தி நடிகையான இவர் ஏகப்பட்ட இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2019ல் ஒளிபரப்பான பிக் பாஸ் மராத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 7வது நபராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஹீனா பாஞ்சலுக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

heena panchal yellow dress

நடிகை ஹீனா பாஞ்சல் பார்ட்டியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நடிகை என்பதால் மட்டுமே இப்படியொரு நடவடிக்கை பாய்ந்துள்ளது என அவரது சகோதரி மீடியாக்கள் மீது எரிந்து விழுந்துள்ளார். ஹீனா பாஞ்சலின் அம்மா அழுது கொண்டே தனது மகள் எந்தவொரு குற்றமும் செய்யவில்லை. அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.