September 22, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » நித்தியானந்தாவின் சில்மிஷத்தில் சிக்கிய ரஞ்சிதா என்ன ஆனார் தெரியுமா?

நித்தியானந்தாவின் சில்மிஷத்தில் சிக்கிய ரஞ்சிதா என்ன ஆனார் தெரியுமா?

நித்யானந்தாவுடன் நான் இருக்கும் வீடியோ வெளியானதால் ஒரு கட்டத்தில் உலகத்தை விட்டே சென்றுவிடலாம் என்று முயன்றேன் என்று ரஞ்சிதா கூறினார். நடிகை ரஞ்சிதா தனியார் டி.வி. சேனலுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது: எனக்கு குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. அமைதி இல்லாமல் தவித்தேன். என் கஷ்டத்தை பார்த்த நண்பர்கள் நித்யானந்தா பற்றி சொன்னார்கள்.

அவர் ஆசி பெற்றால் கவலைகள் தீரும் என்றார்கள். நண்பர்கள் நிர்ப்பந்தத்தால் ஒரு நாள் நித்யானந்தா ஆசிரமத்துக்கு போய் அவரை சந்தித்தேன். அதன் பிறகு கவலைகள் விலகியது. நித்யானந்தாவால் மன ஆறுதல் பெற்றேன். ஆசிரமம் பிடித்து போனது.

மடத்தில் இருந்தவர்களும் பிடித்துப் போனார்கள். அன்றுமுதல் நித்யானந்தாவின் பக்தையாக மாறி னேன். சில மாதங்களுக்கு முன் நித்யானந்தாவும், நானும் ஆபாசமாக இருப்பது போல் டி.வி.யில் வீடியோ படம் வெளியானது. அதை பார்த்ததும் அதிர்ச்சியானேன்.

ranjitha-photo

அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் அல்ல. இந்த வீடியோ வெளியாக காரணம் என்ன என்று யோசித்தேன். நித்யானந்தாவை பழிவாங்க என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி இருப்பது புரிந்தது. சில சேனல்கள் தங்களின் டி.ஆர்.பி. ரேட்டை உயர்த்திக் கொள்ள அந்த வீடியோபடத்தை போட்டி போட்டு ஒளிபரப்பின. நான் அவமானப்படுத்தப்பட்டேன்.

சினிமாவில் பலகால மாக நடித்து “புகழ்”, “இமேஜ்” போன்ற வற்றை சேர்த்து வைத்தேன். அவை அனைத்தையும் ஒரே நாளில் இழந்தேன். ஒருகட்டத்தில் தற்கொலை முடிவுக்கு கூடபோனேன். அப்படி நான் செத்து போய் இருந்தால் என் தரப்பு நியாயங்களை சொல்ல முடியாமல் போய் இருக்கும். எனக்காக பேசயாரும் இருந்திருக்க மாட்டார்கள்.

வீடியோபடத்தை வெளியிட்ட லெனின் கருப்பன் சரியான ஆள் இல்லை. அவர் என்னிடம் ஒருமுறை தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தார். அப்போது அவர் மீது நான் புகார் எதுவும் அளிக்க வில்லை. ஆசிரமத்தின் பெயர் கெட்டு விடும் என அமைதியாக இருந்தேன். என்று கூறினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ர‌ஞ்சிதா. “நாடோடி தென்றல்” படம் மூலம் அறிமுகமான நடிகை ரஞ்சிதா, தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் பெங்களூர் அருகே பிடதியில் நித்தியானந்தா நடத்தி வரும் ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார்.இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தா-நடிகை ரஞ்சிதா தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இளைய தலைமுறையினரும், பெண்களும் சமுதாய சீரழிவில் சி க்கி விட இது காரணமாக அமையலாம். எனவே ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட நடிகை ரஞ்சிதா மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது உரிய ந டவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

இதற்கு கர்நாடகத்தில் உள்ள மடாதிபதிகளும் இந்துத்துவா அமைப்புகளும் க டும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதனை தொடர்ந்து நடிகை ரஞ்சிதா, இனி “மா ஆனந்தமயி” என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.