நடிகை சாயிஷா தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர்.
திரைத்துறைக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டு க்யூட் கப்புலாக கோலிவுட்டில் வலம் வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் தொடர்ந்து ஆர்வமாக இருக்கும் சாயிஷா ஷூட்டிங் ஸ்பாட்டில் பாவாடை தாவணியில் அசந்து போகும் நளினத்துடன் ஆடிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சாயிஷா முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த டான்ஸர் எனவும் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா என தமிழிலும் நடிப்பு வேட்டையை தொடங்கியவர் அதைத்தொடர்ந்து நடிகர் ஆர்யா உடன் கஜினிகாந்த், காப்பான் மற்றும் சமீபத்தில் வெளியான டெடி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி பின் காதலர்களாக மாறி இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டு தமிழ் சினிமாவில் க்யூட் கப்புலாக வலம் வந்து கொண்டுள்ளனர்.
இப்பொழுது விஜய் 65வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் இவர் கைவசம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் ஒப்பந்தம் ஆகி வருகிறார். குறிப்பாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் சாயிஷா நடிக்கிறார்.
இவ்வாறு நடனம், நடிப்பு என அனைத்திலும் கைதேர்ந்தவரான இவருக்கு பல மொழிகளில் மார்க்கெட் உச்சத்தில் இருக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் ரொமான்டிக் பாடல் ஒன்றுக்கு பாவாடை தாவணியில் பிசிறு தட்டாமல் நளினத்துடன் ஒரே டேக்கில் செய்து முடித்த அட்டகாசமான பாடல் பதிவு வீடியோவை தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்க, சொல்லவா வேண்டும் ரசிகர்களின் ஏகபோக பாராட்டுகளை பெற்று வைரலாகி வருகிறது அந்த வீடியோ.
மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா