ஆபாச படங்களில் தன்னை நடிக்க உசுப்பேற்றி விட்டதே எனது குருநாதர் ராஜ் குந்த்ரா தான் என பிரபல நடிகை அளித்துள்ள பேட்டி பாலிவுட்டில் இடியாய் இறங்கி இருக்கிறது.
தனது கணவர் ஆபாச படங்களை தயாரிக்கவில்லை என வாதிட்டு வந்த நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடிகை ஷெர்லின் சோப்ராவின் இந்த பேட்டி மேலும், பிரச்சனையை உண்டாக்குவது நிச்சயம்.
ஆபாச படங்களை தயாரித்து மொபைல் செயலிகளில் வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட தயாரிப்பாளர் ராஜ் குந்த்ரா கடந்த ஜூலை 16ம் தேதி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போட்டோஷூட்டிற்கே பிரபல நடிகைகள் நிர்வாண கோலத்தில் போஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். வெப்சீரிஸ் எனும் பெயரில் சென்சார் இல்லாததால் ஒடிடி தளங்கள் ஆபாச வசனங்களையும் ஆபாச காட்சிகளையும் இஷ்டத்துக்கு கட்டவிழ்த்து விட்டு கல்லா கட்டி வருகின்றனர்.

மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாகவும் வார்த்தைக்கு வார்த்தை ஆபாச வசனங்களை கொட்டியும், ஆபாச காட்சிகளை நிறைத்தும் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் எடுக்கப்பட்டு வரும் ஒடிடி படைப்புகளுக்கு எதிராக பெருகிய எதிர்ப்பு காரணமாகவே அதனை கண்காணிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து ஹாட் ஷாட்ஸ் எனும் மொபைல் செயலி மூலம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து பல கோடிகள் சம்பாதித்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய மும்பை போலீசார் அவரை கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி அதிரடியாக கைது செய்தனர்.

தனது கணவர் ராஜ் குந்த்ரா எடுத்தது எதுவுமே ஆபாச படங்கள் இல்லை என்றும் அவை எரோடிகா படங்கள் என்றும் அவை சட்ட விரோதம் இல்லை என்றும் தனது கணவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார் நடிகை ஷில்பா ஷெட்டி. அவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ஷெர்லின் சோப்ரா சமீபத்தில் வட இந்தியா மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டி மீண்டும் ஒரு பெரிய குண்டை இந்த விவகாரத்தில் போட்டுள்ளது. ஆபாச பட நடிகையான அவர், தான் இப்படி நடிக்க காரணமே ராஜ் குந்த்ரா தான் என ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார்.
மேலும், தன்னை தவறான திசைக்கு வழிநடத்திய மென்டாரே அவர் தான் என்றும் ஏகப்பட்ட பிட்டுகளை போட்டு ஆபாச நடிகை ஷெர்லின் சோப்ரா தயாரிப்பாளர் ராஜ் குந்த்ரா வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அரை நிர்வாணமாக நடிப்பதும், ஆபாச படங்களில் நடிப்பது கேஷுவலான ஒன்று தான் என்றும் அதில் ஒன்றும் பெரிய தவறு ஏதும் இல்லை. ஏகப்பட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களே முழு நிர்வாணமாக நடித்து வருகின்றனர் என உசுப்பேற்றியே தன்னை தவறான பாதையில் தள்ளி விட்டார் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
மேலும், தனது மனைவி ஷில்பா ஷெட்டிக்கு உங்களோட கவர்ச்சி வீடியோக்கள் எல்லாம் ரொம்பவே பிடித்திருக்கிறது. நீங்கள் ரொம்ப செக்ஸியாக நல்லா நடிக்கிறீர்கள் என அவர் பாராட்டினார் என்றார். ஷில்பா ஷெட்டி போன்ற ஒரு பெரிய ஆளுமை நம்மை பாராட்டும் போது சரி எது தவறு எது என புரிந்து கொள்ள முடியாமல் அந்த புதை குழியில் சிக்கிக் கொண்டேன் எனக் கூறியுள்ளார்.
ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ராஜ் குந்த்ரா நீதிமன்ற காவலில் இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து மும்பை குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சனிக்கிழமை அன்று ராஜ் குந்த்ரா சார்பில் கைது நடவடிக்கைக்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனது கணவரை ஜாமினில் கொண்டு வர நடிகை ஷில்பா ஷெட்டி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ