Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » ஸ்ருதி ஹாசன் காதலர் ஸ்ருதி ஹாசனின் உடலில் எழுதியது என்ன? வைரலாகும் வீடியோ

ஸ்ருதி ஹாசன் காதலர் ஸ்ருதி ஹாசனின் உடலில் எழுதியது என்ன? வைரலாகும் வீடியோ

நடிகை ஸ்ருதி ஹாசன் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர். நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார் ஸ்ருதி. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் மற்றும் பிரபாஸுடன் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அவர் படு கிளாமராக வெளியிடும் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வருகிறது.

அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது புதிய காதலருடன் ஷேர் செய்த வீடியோ ஒன்று இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக ஸ்ருதி ஹாசனை கழுவி ஊற்றி வருகின்றனர்.

shruti haasan with her lover

நடிகை ஸ்ருதி ஹாசன் முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து மீண்டும் காதலில் விழுந்தார் நடிகை ஸ்ருதி ஹாசன். ஸ்ருதி ஹாசன் தற்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதி ஹாசனும் தெரிவித்திருந்தார்.

இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான போட்டோ ஒன்று பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

shruti haasn with her lover

அதாவது மும்பையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு தனது காதலனுடன் சென்ற ஸ்ருதி ஹாசன், அங்கு ஒரு காலை தூக்கியப்படி தனது காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்னதான் காதலர் என்றாலும் இப்படியா என விளாசினர்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன், தனது காதலருடன் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மல்லாக்க படுத்திருக்கும் ஸ்ருதி ஹாசனின் வயிற்றில் அவரது காதலர் சாந்தனு ‘ THUG LIFE’ என்று சாக் பீஸால் எழுதியுள்ளார்.

அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், எழுதும் இடமா அது என விளாசி வருகின்றனர்.

shruti haasn with face mask latest

இன்னும் சிலர் வேறு எங்கெல்லாம் எழுதியிருக்கிறார் என்றும் டபுள் மீனிங்கில் கேட்டு வருகின்றனர். பல நெட்டிசன்கள் எல்லாம் சரிதான் இதையெல்லாம் சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்றும் கேட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் கொடுத்து வைத்த காதலர் என்றும் வாழ்க்கையை கொண்டாடுகிறீர்கள் என்றும் ஸ்ருதி ஹாசனின் வீடியோவை பார்த்து வாயை பிளந்துள்ளனர். இந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.