அடா சர்மாவை அடடா சர்மா என்றுதான் அழைக்கிறார்கள், சினிமா வட்டாரத்தில். அத்தனை கூல் அவர். எதையும் ஜாலியாக, கேஷுவலாக கையாளும் நடிகைகளில் அவரும் ஒருவர். அதற்கு அவர் இன்ஸ்டா சாட்சி.
ரசிகர்களில் கிண்டல் கேள்விகளுக்குக் கூட, அவரே வெட்கப்படும் அளவுக்கு பதில் சொல்வதில், அடா செம ஷார்ப்! சில நேரங்களில் அவரே காமெடியாளராக மாறி நக்கல் நையாண்டியில் ஈடுபடுவதும் உண்டு. அது அவர் சுபாவம். இந்த கொரோனா லாக்டவுனில் இன்ஸ்டாவில் அவர் காட்டிய விளையாட்டுகள், கலகலப்பானவை.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இவர். அடிக்கடி டான்ஸ், யோகா, ஒர்க் அவுட் மற்றும் வீட்டு வேலை செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவிடுவதை வேலையாக செய்து வருகிறார். சில நேரங்களில் எக்கச்சக்க கவர்ச்சியில் போட்டோ எடுத்து ரசிகர்களை திணறடிப்பார்.
இவர் தமிழில், சிம்பு நடித்த, இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சார்லி சாப்ளின் 2 படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தியில் 1920, பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது, மேன் டு மேன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஆண் தோற்றத்தில் நடிக்கிறார் அவர்.
பாலிவுட், கோலிவுட் நடிகைகள் விடுமுறைக்காக மாலத்தீவுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். டாப்ஸி, காஜல், பிரணிதா, வேதிகா, ரகுல் பிரீத் சிங், சமந்தா, ஷோபி சவுத்ரி என அங்கு ஏகப்பட்ட டிராபிக். இதையடுத்து சமீபத்தில் ஏரி ஒன்றின் அருகில் நின்று வீடியோ வெளியிட்ட நடிகை அடா சர்மா, கலாய் கேப்ஷன் கொடுத்திருந்தார்.
இது மாலத்தீவு அல்ல, தமிழ்நாட்டில் உள்ள மாகாராஜபுரம் என்றும் இங்கு வேறும் யாரும் இதுவரை படம்பிடிக்கவில்லை, நான்தான் பர்ஸ்ட் என்றும் கிண்டலாகக் கூறியிருந்தார். இந்நிலையில், இப்போது அவர் பச்சை நிற டீஷிர்ட் அணிந்து உள்ளாடையை தெரிய விட்டு போட்டோக்களை போட்டு இன்ஸ்டகிராமை அலற விட்டுள்ளார். இதில் இவர் இரண்டு காலிலும் வித்தியாசமான செருப்பு அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்.
அதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். இதற்கு #100yearsof AdahSharma என கேலியான ஹேஷ்டேக் கொடுத்திருக்கிறார். பலர் இந்தப் புகைப்படங்களையும் அவருடையேன கேலியையும் பாராட்டியுள்ளனர். அருமை, செம, மிரட்டல், அழகு என்று வழக்கம் போல புகழ்ந்து தள்ளியுள்ளனர்.



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ