நடிகை ஐஸ்வர்யா தத்தா சஞ்சனாசிங் இருவரும் இணைந்து இந்தி பாடலுக்கு ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. அலேகா,கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா,பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் ஆகிய படங்களில் ஐஸ்வர்யா நடித்து வருகிறார்.
பல திரைப்படங்களில் கிளாமர் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள சஞ்சனா சிங் இப்பொழுது ஐஸ்வர்யா தத்தா உடன் இணைந்து ஆடிய வீடியோ இணையதளத்தை கலக்கிக் கொண்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டு பிரபலமாக உள்ளவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அறிமுகமாகி முதல் படத்திலேயே நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்த ஐஸ்வரியாவுக்கு அதன்பிறகு சில காலம் ஹீரோயினாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தங்கை மற்றும் சிறப்புத் தோற்றத்தில் சில படங்களில் வந்து சென்றார்.
அதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் பரிச்சயமான ஐஸ்வர்யாவுக்கு அதன்பிறகு எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வர இப்போது கைவசம் அலேகா, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர், கன்னித்தீவு என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இதில் அலேகா ரிலீசுக்கு தயாராக உள்ளது இதில் நடிகர் ஆரி ஹீரோவாக நடித்துள்ளார்.

ரேணிகுண்டா, கோ, அஞ்சான்,தனி ஒருவன், மீகாமன் பல திரைப்படங்களில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சஞ்சனா சிங், ஐஸ்வர்யா தத்தாவும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வருகின்றனர். அவ்வப்போது நேரில் சந்திக்கும் பொழுது எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ