அமிதாப் பச்சனின் ‘MayDay’ படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை ஆகான்க்ஷா தமிழில் ஆதியின் ‘கிளாப்’ படம் மூலம் அறிமுகமாகவுள்ளார். இயக்குநர் பிருத்வி ஆதித்யா இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான ‘கிளாப்’ படத்தின் அட்டகாசமான டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டீசரை பார்த்த நடிகர் அமிதாப் பச்சன் இந்த படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்துள்ள ஆகான்க்ஷாவை மனமார பாராட்டி உள்ளார்.
ஈரம், அரவாண் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த நடிகர் ஆதி தெலுங்கிலும் பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அங்கேயும் தனக்கான ரசிகர் வட்டத்தை வைத்திருக்கிறார். இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவல் படமாக உருவாகி உள்ள கிளாப் படத்தில் தடகள வீரராக நடிகர் ஆதி நடித்துள்ளார்.

இந்தியில் பிரபல டிவி நடிகையாக கலக்கி வந்த ஆகான்க்ஷா கடந்த 2017ம் ஆண்டு வெளியான பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கில் வெளியான மல்லி ராவா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ஆகான்க்ஷா சிங் முதன்முறையாக தமிழில் கிளாப் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.
நடிகர் ஆதி மற்றும் ஆகான்க்ஷா சிங் நடிப்பில் உருவாகி உள்ள கிளாப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், அதனை பார்த்த நடிகர் அமிதாப் பச்சன் மேடே படத்தில் தன்னுடன் இணைந்து நடித்துள்ள நடிகை ஆகான்க்ஷா தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்க வாழ்த்துக்கள் என வாழ்த்தி உள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சன் தனது கிளாப் படத்தின் டீசரை பார்த்து விட்டு தன்னை பாராட்டி இருப்பதை அறிந்ததும் நடிகை ஆகான்க்ஷாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்றும் வார்த்தைகளே வரவில்லை சார் ரொம்ப ரொம்ப நன்றி என்று அமிதாப் பச்சனுக்கு நன்றி கூறியுள்ளார் ஆகான்க்ஷா.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆதி, ஆகான்க்ஷா சிங், நாசர், பிரகாஷ் ராஜ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு இசையை மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்துள்ளார். கிளாப் டீசரிலேயே இளையராஜாவின் பின்னணி இசை மிரட்டுகிறது.
டீசரின் ஆரம்பத்தில் தடகள வீரராக ஓட்டப்பந்தயத்தில் ஆர்வமுள்ள இளைஞராக காட்சிப்படுத்தப்படும் நடிகர் ஆதி பல பிரச்சனைகளை சந்திக்கும் காட்சிகள், நாயகி ஆகான்க்ஷாவுடன் காதல் உள்ளிட்ட ரொமான்டிக் சீன்களோடு நகர கடைசியில் ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் விதமாக ஒரு கால் இழந்து நிற்கும் காட்சி இதயத்தை கனக்க வைக்கிறது. விரைவில் வெளியாகவுள்ள இந்த படம் வெற்றி பெறவும் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.
மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா