Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » கவர்ச்சியாக பெல்லி நடனம் ஆடி அசத்திய பிரபல நடிகை அமிதாப் பச்சன் பேத்தி ஷாக்

கவர்ச்சியாக பெல்லி நடனம் ஆடி அசத்திய பிரபல நடிகை அமிதாப் பச்சன் பேத்தி ஷாக்

பாலிவுட்டின் அடுத்த வாரிசு நடிகையாக வலம் வரப் போகிற ஷனாயா கபூரின் பெல்லி நடன வீடியோவை பார்த்து தான் ஷாக் ஆகிப் போய் அப்படியொரு கமெண்ட்டை அமிதாப் பச்சனின் பேத்தி போட்டுள்ளார். அப்படி என்ன பெல்லி நடனத்தை ஆடியுள்ளார் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போய் வீடியோவை பார்த்தால், நமக்கே வயிறை கலக்குகிறது. அந்த அளவுக்கு ஒரு தரமான இடுப்பாட்டத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

பெயரை பார்த்ததும் என்ன ஷெனாய் நகரா என படித்து விட வேண்டாம். பாலிவுட் நடிகர்களான சஞ்சய் கபூர் மற்றும் மஹீப் கபூரின் மகள் ஷனயா கபூர் தான். தனது இடுப்பை இஷ்டத்துக்கு ஆட்டி பாலிவுட் ரசிகர்களின் தூக்கத்தை இப்பவே கெடுக்க ஆரம்பித்து விட்டார்.

shanaya kapoor

பாலிவுட்டில் வாரிசு நடிகர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்து படங்களில் அறிமுகப்படுத்தி வரும் தர்மா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தான் ஷனாயா கபூரையும் பாலிவுட்டில் அறிமுகப்படுத்த உள்ளார். சீக்கிரமே இளம் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஷனாயா கபூர் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

இடுப்பாட்டும் இளவம்பஞ்சு காடு போல என்னம்மா இடுப்பை ஆட்டி பெல்லி டான்ஸ் ஆடுகிறார். தாளத்திற்கு தப்பாமல் ஷனாயா கபூரின் பெல்லி போடும் நடனத்தை பார்த்தால் தலையே சுற்றும் அளவுக்கு கனகச்சிதமாக உள்ளது. தனது பெல்லி ஆசிரியருடன் இணைந்து பெல்லி நடனத்தை கற்று வருவதாக இந்த வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

shanaya kapoor latest viral pic

அமிதாப் பச்சனின் பேத்தியான நவ்யா நந்தா ஷனயா கபூரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார். ஷனாயா கபூரின் இந்த இடுப்பாட்ட வீடியோவை பார்த்த அவர், தனக்கு வயித்த வலியே வந்திடும் போல இருக்கே என கமெண்ட் போட்டு ஷனாயாவின் ஆட்டத் திறமையை பாராட்டியுள்ளார். மேலும், பல பிரபலங்களும் ஷனாயாவின் இந்த நடனத்தை பாராட்டி வருகின்றனர்.

navya nanda

கவர்ச்சியான பெல்லி நடனத்தை மட்டுமின்றி பாரம்பரிய நடனத்தையும் முறையாக பயிற்சி பெற்று வருகிறார் ஷனாயா கபூர். சமீபத்தில் சார்வி எனும் ஆசிரியரிடம் பாரம்பரிய நடனத்தை கற்றுக் கொள்ளும் வீடியோவையும் வெளியிட்டு வைரலாக்கி இருந்தார். பாலிவுட் நடிகையாக வேண்டும் என்றால் நன்றாக ஆடத் தெரிந்திருக்க வேண்டுமே!