நடிகை அமைரா தஸ்தூர் மழையில் நினைந்து கவர்ச்சி தாகமூட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அமைரா தஸ்தூர் பிரபுதேவாவுடன் பஹிரா படத்திலும், ஜிவி பிரகாஷூடன் காதலைத்தேடி நித்தியானந்தா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
2013ம் ஆண்டு இஷாக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இது ஒரு காதல்திரைப்படமாகும். இப்படத்தை மணீஷ் திவாரி இயக்கினார். பிரதுக் பப்பருடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் அமைரா தஸ்தூர். இந்த படத்தில் நடித்ததற்காக அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.
தமிழில் கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படமாகும். இதில் ஒவ்வொரு கதை இடம் பெற்று ரசிகர்களை மகிழ்விந்து இருக்கும். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் வெற்றிப்பெற்றன. தங்கமாரி ஊதாரி, நியூயார்க் கடலே, ஆத்தாடி ஆத்தாடி போன்ற அனைத்துப்பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தன. அநேகன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து, தமிழில் பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த அமைராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அநேகன் படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக எந்த வாய்ப்புகளும்இல்லை.இதனால், மற்ற நடிகைகளைப்போல தெலுங்கு பக்கம் சென்றார். அங்கேயும் ஏமாற்றமே மிஞ்சியது எதிர்பார்த்த படி வாய்ப்பு வரவில்லை. தெலுங்கிலும் மனசுக்கு நச்சிந்தி என்ற திரைப்படத்தில் மட்டும் நடித்தார். இந்த படமும் சொல்லும்படி இல்லாததால் அங்கிருந்தும் நடையை கட்டினார் அமைரா.
மீண்டும் பாலிவுட்டுக்கே சென்ற அமைரா தஸ்தூர்,அங்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இந்தியில் Mr.X, Judge,entall Hai Kya, Made in China போன்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படங்கள் ஓரளவு பாலிவுட்டில் இவருக்கு பட வாய்ப்புகளை பெற்றுத்தந்தன.

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், ஆகிய திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹீராவில் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியா நடிக்கிறார் அமைரா தஸ்தூர். தி ஜங்கிள் புக் என்ற பிரபல காமிக் கதையில் வரும் சிறுத்தையின் பெயர் தான் பஹீரா. அந்த சிறுத்தையை போல குணம் கொண்டவன் தான் இந்த படத்தில் நாயகன். அதனால் தான் இப்படத்திற்கு பஹீரா என்று பெயர் வைக்கப்பட்டது.
ஜிவி பிரகாஷ் நடிக்கும் காதலை தேடி நித்யானந்தா என்ற படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கிக்கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அமைரா தஸ்தூர், தனது வலைத்தள பக்கத்தில் மொத்த அழகையும் நச்சுனு தெரியவிட்டு போஸ் கொடுத்துள்ளார். இதுவும் வெள்ளை நிற உடை அவரின் அழகை மேலும் கூட்டி உள்ளது. இணையத்தில் வெளியாகி உள்ள இந்த போட்டோ அனைவரையும் ஏக்க பெருமூச்சு விட வைத்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் கவிதை எழுதாததுதான் குறை அந்த அளவுக்கு அவரை வர்ணித்து வருகின்றனர்.



மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை