Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » மயக்கமடைய செய்து ஆபாச படம் எடுத்ததாக நடிகை மீது புகார் – நடிகைக்கு ஜாமின் மறுப்பு

மயக்கமடைய செய்து ஆபாச படம் எடுத்ததாக நடிகை மீது புகார் – நடிகைக்கு ஜாமின் மறுப்பு

பிரபல கவர்ச்சி நடிகை கெஹனா வசிஸ்த்தின் முன் ஜாமின் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பாலிவுட்டில் ஆபாச பட விவகாரம் தலை விரித்து ஆடி வருகிறது. வெப் சீரிஸ் எடுக்கிறோம் என்கிற பெயரில் நடிகைகளையும் இளம் மாடல்களையும் நிர்வாணப்படுத்தி ஆபாச படங்களை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை கடந்த மாதம் மும்பை போலீசார் கைது செய்தனர்.

ராஜ் குந்த்ராவின் ஹாட்ஸ்பாட்ஸ் ஆப்பில் வெளியான ஆபாச படங்களில் நடித்து வந்த நடிகை கெஹனா வசிஸ்த் மீது இளம் மாடல் ஒருவர் தொடுத்த வழக்கு தொடர்பாக கெஹனா வசிஸ்த்தை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

gehana vasisth

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை தொடர்ந்து தன்னையும் போலீசார் கைது செய்து விடுவர் என்பதால், உஷாரான நடிகை கெஹனா வசிஸ்த் முன் ஜாமின் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அவரது ஜாமின் மனுவை ஏற்க முடியாது எனக் கூறி நிராகரித்துள்ளார்.

ஆபாச படத்தில் நடித்தது மட்டுமின்றி இன்னொரு பெண்ணை வலுக்கட்டாயமாக ஆபாச படத்தில் நடிக்க வைத்த வலுவான குற்றச்சாட்டு நடிகை கெஹனா வசிஸ்த் மீது விழுந்துள்ளதை சுட்டிக் காட்டிய மும்பை நீதிமன்ற நீதிபதி சோனாலி பி அகர்வால் நடிகை கெஹனாவின் மனுவை நிராகரித்து இருப்பது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகை கெஹனா வசிஸ்த் ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை வைத்து ஆபாச படம் எடுத்தார் என அந்த பெண் அளித்துள்ள புகார் அடிப்படையில் கட்டாயம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

gehana vasisth viral

மயங்கிய நிலையில் இருந்த என்னை இரு ஆண்களுடன் படு ஆபாசமாக இருக்க வைத்து படம் எடுத்தனர் என்றும், நினைவு தெளிந்து மோசமான காட்சிகளை நீக்க வேண்டும் என சண்டை போட்ட நிலையில், அதனை எடிட்டிங்கில் நீக்குவதாக உறுதி அளித்தனர். ஆனால், அந்த ஆபாச படம் எந்தவொரு எடிட்டும் செய்யாமல் ஹாட்ஷாட் செயலியில் வெளியானதும் தான் அந்த பெண் இப்படி யொரு புகாரை அளித்துள்ளாராம்.

கவர்ச்சி நடிகை கெஹனா வசிஸ்த்தின் வக்கீல் சுனில் குமார் வாதாடும் போது, அந்த பெண் ஒரு ஆபாச பட நடிகை தான் என்றும் ஏகப்பட்ட ஆபாச படங்களில் அவர் நடித்துள்ளார் என்றும் தனது கட்சிக்காரர் கெஹனாவை சிக்க வைக்க வேண்டும் என்றே இப்படி பொய்யான வழக்கை தொடுத்துள்ளார் என்றும் கூறினார்.

gehana vasisth latest

அதுமட்டுமின்றி, நடிகை கெஹனா வசிஸ்த்தை இந்த விவகாரத்தில் சிக்க வைக்காமல் இருக்க மும்பை போலீசார் லஞ்சம் கேட்டதாக அவர் தெரிவித்த நிலையில், அதற்கு பழி வாங்கும் நோக்கத்துடனும் போலீசாரை காப்பாற்றும் வகையில் நடிகையை கட்டம் கட்டி இந்த வழக்கில் மும்பை போலீசார் செயல்படுவதாகவும் சுனில் குமார் கூறினார். ஆனால், நீதிபதி அவரது வாதம் ஏற்புடையதாக இல்லை என்றும் போலீசார் விசாரித்தால் தான் உண்மை வெளியாகும் எனக் கூறி முன் ஜாமினை தள்ளுபடி செய்துள்ளார்.

கடந்த மாதம் ஜூலை 19ம் தேதி ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தயாரிப்பாளருமான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில், நாங்கள் எடுத்தது எல்லாமே காம படங்கள் மட்டுமே என்றும் அவை ஆபாச படங்கள் இல்லை என்றும் நடிகை கெஹனா வசிஸ்த் ராஜ் குந்த்ராவுக்கு ஆதரவாக பேசி இருந்தார்.

மும்பை நீதிமன்றம் முன் ஜாமின் வழங்காத நிலையில், நடிகை கெஹனா வசிஸ்த்தை இந்த வழக்கில் விசாரிக்க மும்பை போலீசார் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாமின் வழங்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவும் நடிகை கெஹனா வசிஸ்த் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

gehana vasisth in saree