தமிழில் இதுவரை இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பல கோடி ரசிகர்களை கொண்டிருப்பவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் பிரபலமான நடிகையாக உள்ள இவர் இப்பொழுது பத்மகுமார் இயக்கத்தில் ஆசிப் அலியுடன் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழிலேயே நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் அனுபமா இப்பொழுது அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே திரைப்படத்தில் நடித்திருக்க படுக்கை அறையில் பட்டாபட்டி டவுசர் உடன் சில்மிஷ போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை தவிக்க விட்டுள்ளது.

தென்னிந்தியாவில் ஒரு கலக்கு கலக்கிய திரைப்படம் பிரேமம் இந்த படம் மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இதில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிகை அனுபமா நடித்திருப்பார். பிரேமம் திரைப்படத்தில் அனுபமாவுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தெலுங்கு மற்றும் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு கொடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார்.
கொடி படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த அனுபமா தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார். கன்னடத்திலும் படங்களில் நடித்து அங்கும் அறிமுகத்தை கொடுத்துள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மணியாரயிலே அசோகன் திரைப்படத்தில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து உள்ளார். இந்த நிலையில் தமிழில் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார் அந்த வகையில் அதர்வா இணைந்து தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கில் நானி நடிப்பில் பிரம்மாண்ட வெற்றிபெற்ற நின்னுக்கோரி திரைப்படத்தை தமிழில் இயக்குனர் ஆர் கண்ணன் ரீமேக் செய்து இயக்கியுள்ளார். இதில் நானியின் கதாபாத்திரத்தில் அதர்வாவும் நிவேதா தாமஸ் கதாபாத்திரத்தில் அனுபமாவும் நடித்துள்ளனர் மேலும் தெலுங்கில் ஆதி இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்க தமிழில் வேலையில்லா பட்டதாரி புகழ் அமிதிஷ் நடித்துள்ளார். காதல் மற்றும் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள தள்ளிப்போகாதே போஸ்டரிலேயே மிக நெருக்கமாக இருவரும் நடித்திருக்க படத்திலும் பல நெருக்கமான காட்சிகள் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து கட்டப் பணிகளும் முடிவடைந்து தள்ளிப்போகாதே மிக விரைவில் ரிலீஸ் ஆக இருக்க இப்படத்தை தொடர்ந்து அனுபமா அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சமூக வலைதளங்களை அலற விடும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனுபமா கலக்கிக் கொண்டிருக்க இப்பொழுது கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று உள்ளார். வெறும் பட்டாபட்டி டவுசர் உடன் முண்டா பனியன் அணிந்து கொண்டு படுக்கை அறையில் ஒரு கையில் தலை முடியை இறுக்க பிடித்துக் கொண்டு ரசிகர்களின் மனம் கிறங்கி போகும் அளவிற்கு சில்மிஷ போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இப்பொழுது இந்த புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ