IPL போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கையில் இன்றைய தினம் 55 ஆவது போட்டியில் CSK மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்டன.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது, அதன்படி 20 ஓவர்கள் நிறைவில் 167 ஓட்டங்களுக்கு 8 இலக்குகளை இழந்தது, அதிகபட்ஷமாக துபே 25 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மார்ஷ் 3 ஓவர்கள் பந்து வீசி 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளை கைப்பற்றினார்,


டெல்லி அணி 168 ஓட்டங்களை இலக்காக கொண்டு ஆடிய போது அவர்களால் 140 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது, அதிகபட்ஷமாக ரோசௌவ் 31 ஓட்டங்களை பெற்று ஆடடமிழந்தார், பந்துவீச்சில் பத்திரன 3 இலக்குகளை கைப்பற்றிக்கொண்டார்.


இறுதியில் சென்னை அணி 27 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடியது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார்.

இந்த போட்டியின் தோல்வியோடு டெல்லி அணியின் பிலே ஆப் கனவு தகர்தெறியப்பட்டது. IPL 2023 ஆட்டத்தில் முதலாவதாக வெளியேறிய அணியாக டெல்லி அணி காணப்படுகிறது.
மேலதிகமாக
சென்னை அணிக்கு கை நழுவிப்போகும் பிலே ஆப் சுற்று வாய்ப்பு
மும்பை அணியின் வெற்றிக்கு இவர்கள் தான் காரணமா?
சிறப்பாக பந்து வீசியும் சென்னையின் வெற்றி கை நழுவிப்போனது…