ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் நடிகை காயத்ரி சங்கர். தொடர்ந்து பல படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றியிருக்க இப்பொழுது மீண்டும் மாமனிதன் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ள நடிகை காயத்ரி இப்பொழுது காட்டுக்குள் மான்குட்டி போல் துள்ளிக் குதித்து விளையாடும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை காயத்ரி சங்கருக்கு அடுத்ததாக வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மிகப்பெரிய பிரபலத்தை பெற்றுத்தந்தது. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டடித்தது.
விஜய் சேதுபதி, காயத்ரி காம்போ முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக அடுத்தடுத்து ரம்மி,புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்,சூப்பர் டீலக்ஸ் சீதக்காதி என தொடர்ந்து இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற்று வந்தன. இப்பொழுது துக்ளக் தர்பார, மற்றும் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமனிதன் உள்ளிட்ட படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர் மலையாளத்தில் இப்பொழுது அறிமுகமாக உள்ளார். ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணன் போடுவால் இயக்கத்தில் “ன்ன தான் கேஸ் கொடு” என்ற படத்தில் நடித்து மலையாளத்தில் துறையில் அறிமுகமாக உள்ளார்.
திரைப்படங்களைத் தொடர்ந்து ஓடிடி தளத்திற்கு வெப் சீரியலிலும் நடித்து வரும் காயத்ரி ஃபிங்கர்டிப் மற்றும் வெள்ளை ராஜா உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் நடித்திருந்தார். தமிழைத் தொடர்ந்து மலையாளத்திலும் கலக்கிக் கொண்டிருக்கும் காயத்ரி இப்பொழுது காட்டுக்குள் குட்டி பாவாடையுடன் மான்குட்டி போல துள்ளிக் குதித்துக் கொண்டு விளையாடும் செம க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா