மணிரத்னம் தயாரிப்பில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி உள்ள நவரசா 9 இயக்குநர்கள் 9 குறும்படங்களை இயக்கி உள்ளனர். இதில் காதல் ரசமான ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ கெளதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் குறும்படமாகும். இந்த குறும்படத்தில் நடித்த மலையாள நடிகையான ப்ரயாகா ரோஸ் மார்ட்டின், ஏற்கனவே மிஸ்கின் படத்தின் நடிகை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான தமிழ் படம் பிசாசு. இந்த படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ப்ரயாகா ரோஸ் மார்டின். அதாவது அந்த படத்தில் கார் விபத்தில் உயிரிழந்து பேயாக வரும் பெண். கேரளா நடிகைகையான இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான சாகர் அலயஸ் ஜாக்கி ரீலோடட் என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதன் பின்பு கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான உஸ்டாத் ஹோட்டல் என்ற மலையாள படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் ப்ரயாகா ரோஸ் மார்ட்டின். இவர் மிஸ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் கூட சில காட்சிகளில் மட்டுமே நடித்திருப்பார். 2014ஆம் ஆண்டு வெளியான ஒரு முறை வந்து பார்த்தாயா என்ற மலையாள படத்தில் நடிகை ப்ரயாகா ரோஸ் மார்ட்டின் அறிமுகமானார்
பொதுவாக சினிமா உலகில் புதிய பட வாய்ப்புகளை பெற நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பார்கள். முதலில் மாடர்ன் டிரசில் தொடையை காட்டுவார்கள், பின்பு இடையழகு, முன்னழகு என்று கவர்ச்சி பொம்மைகளாக மாறி விடுவார்கள். ஆனால் நடிகை பிரயகா ரோஸ் மார்ட்டின் தனக்கு பட வாய்ப்புகள் இல்லாத போதும் கவர்ச்சியாக நடிக்க மறுத்து தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலே நடித்து வந்தார்.
மசாலா படமாக இருந்தாலும் சரி, கமர்ஷியல் படமாக இருந்தாலும் சரி, ரசிகர்கள் எதிர்பார்ப்பது கவர்ச்சி. இதை பூர்த்தி செய்ய தவறிய நடிகை ப்ரயாகா ரோஸ் மார்ட்டின் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகியும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

கீதா, உல்டா (Ulta) என்ற கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஆனால் எந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. இதையடுத்து, நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழில், நவசராவில் கிட்டார் கம்பி மேலே நின்று என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், அச்சம் என்பது மடமையடா’ என தன்னுடைய முந்தைய படங்களை எல்லாம் கெளதம் மேனன் சரியான அளவில் சேர்த்து அரைத்து செதுக்கியிருக்கும் படமே கிட்டார் கம்பி மேலே நின்று. இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் என்ன பேசுகிறோம், ஏன் பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்பதே தெரியாமல் படத்தில் சூர்யாவும், ப்ரயாகா ரோஸ் மார்ட்டினும் மாறி மாறி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். காதல் ரசம் சொட்ட சொட்ட மழையில் நனைந்த ஓர் உணர்வு. அழகு பதுமையான ப்ரயாகா ரோஸ் மார்ட்டினுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையான திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா