ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் அடுத்த படம் சிவக்குமாரின் சபதம். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாக சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.
மீசையை முருக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் படங்களின் மூலம் தன்னை கோலிவுட்டின் சிறப்பான ஹீரோவாகவும் அடையாளப்படுத்தியுள்ளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. தன்னுடைய அதிரடியான இசையின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் நாயகனாக நடிக்கும் அடுத்த படம் சிவக்குமாரின் சபதம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா.
இந்த படத்தில் நாயகனாகவும் நடித்துள்ள அவர் முதல் பிரதி அடிப்படையில் சத்ய ஜோதி பிலிம்சுடன் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இந்த படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில் படத்தின் சூட்டிங் முடிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது திங்க் மியூசிக்குடன் கைகோர்த்துள்ளதாக சத்ய ஜோதி பிலிம்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட்டு, விரைவில் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
Happy to be associated with @thinkmusicindia for our upcoming film – @hiphoptamizha’s #SivakumarinSabadham 💥
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) June 28, 2021
First single coming 🔜
Are you ready for the celebration? 🥳https://t.co/VBbTpfsL6I#SivakumarinSabadhamwithThink@SathyaJyothi_ #IndieRebels pic.twitter.com/yF08ltBgFH
மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா