ஹுமா குரேஷி அக்ஷய் குமாரின் ‘பெல் பாட்டம்’ படத்திலும், வலிமை படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குரேஷி இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில் நெகட்டிவ் கருத்துக்களை எதிர் கொள்வது குறித்து கூறியுள்ளார்.
காலா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் காதலியாக ஹுமா குரேஷி, மீட்டாத வீணையாக வந்து பலரின் மனதில் வீணை மீட்டி சென்று இருப்பார். மும்பை தாராவி மக்களின்நிலத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பேசும்படியாக இருந்தது.
இவர் 2012ம் ஆண்டு கெங்ஸ் ஒப்பி வசுசேய்புர என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து திரைத்துறைக்கு தனது அறிமுகத்தை கொடுத்தார். இதையடுத்து, பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாகி உள்ளார்.

பிரபலமாக இருப்பதால், தொடர்ந்து எதிர்மறையாக கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்படி உருவாகும் கருத்துக்களை எவ்வாறு கையாள்வது என்பதை கற்றுக்கொண்டேன் என்று பேட்டியில் கூறியுள்ளார். சமூகவலைத்தளத்தில் ஒவ்வொரு கருத்தையும் நான் உட்காந்து படிப்பதில்லை. நான் சொல்ல விரும்புவதை நான் சொல்வேன். மற்றவர்களின் கருத்தைப்பற்றி எனக்கு கவலை இல்லை.
மனிதனின் மனம் எளிதில் பாதிக்கப்படுகிறது, ஒருவருக்கு 100 பாராட்டுக்கள் வரும் போது, ஒரு நபர் எதிர்மறையான ஒன்றைச் சொன்னாலும், நமக்கு வந்த அனைத்து பாராட்டுக்களையும் மறந்து ஒரு நெகட்டிவ் கருத்தில் கவனம் செலுத்தி வேதனை அடைவோம். ஆனால் நான் எனக்கு வரும் எதிர்மறை கருத்தில் கவனம் செலுத்துவதை விட கிடைத்த எல்லை இல்லா அன்பில் கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார்.

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா