லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் லக்னோ அணியிடம் அடைந்த தோல்விக்கு, லக்னோ மண்ணில் அந்த அணியை வீழ்த்தி ஆர்சிபி பதிலடி கொடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் வலிமையான லக்னோ அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் டூ பிளஸிஸ் மட்டும் 44 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஃபீல்டிங்கின் போது காயமடைந்த கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கவில்லை. இதனால் கைல் மேயர்ஸ் – ஆயுஷ் பதோனி கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இதனைத் தொடர்ந்து முதல் ஓவரை வீசிய சிராஜ் பந்துவீச்சில் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்தார். மேக்ஸ்வெல் வீசிய 4வது ஓவரில் க்ருனால் பாண்டியா விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, பின்னர் ஆயுஷ் பதோனி ஹெல்சவுட் பந்தில் மீண்டும் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக மைதானத்தில் விராட் கோலி கூடுதல் ஆக்ரோஷத்துடன் செயல்பட்டார்.

ஃபீல்டிங்கின் போது ஏற்பட்ட காயம்.. தொடக்க வீரராக வராத கேஎல் ராகுல்.. லக்னோ அணிக்கு வந்த சிக்கல்! ஃபீல்டிங்கின் போது ஏற்பட்ட காயம்.. தொடக்க வீரராக வராத கேஎல் ராகுல்.. லக்னோ அணிக்கு வந்த சிக்கல்!
தொடர்ந்து வந்த தீபக் ஹூடா ஹசரங்கா பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 7 ஓவர்கள் முடிவிலேயே லக்னோ அணி 38 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஸ்டாய்னிஸ் – கே கவுதம் கூட்டணி அதிரடியாக ஆடியது. 6வது விக்கெட்டுக்கு 27 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டாய்னிஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கிருஷ்ணப்பா கவுதமும் 23 ரன்களில் தேவையில்லாமல் ரன் ஓடி ரன் அவுட்டானார். பின்னர் வந்த ரவி பிஷ்னாய் 5 ரன்களில் ஆட்டமிழக்க, ஆர்சிபி அணியின் வெற்றி உறுதியானது. பின்னர் 9வது விக்கெட்டுக்கு அமித் மிஸ்ரா – நவீன் உல் ஹக் கூட்டணி சேர்ந்தது. இவர்கள் இருவரும் ஒவ்வொரு ரன்களாக ஓடி எடுத்து வந்தனர். இதனால் கடைசி 2 ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 7 ரன்கள் சேர்க்கப்பட, 4வது பந்தில் நவீன் உல் ஹக் ஆட்டமிழந்தார். இதையடுத்து காயத்துடன் இருந்த கேஎல் ராகுல் கடைசி விக்கெட்டாக களமிறங்கினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக கடைசி ஓவரில் லக்னோ அணி வெற்றிபெற 23 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்சிபி அணி சார்பாக ஹர்சல் படேல் அந்த ஓவரை வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தில் அமித் மிஸ்ரா ஆட்டமிழக்க, லக்னோ அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
மேலதிகமாக
டெல்லி அணியின் பிலே ஆப் க்கு ஆப்பு வைத்தது CSK
சென்னை அணிக்கு கை நழுவிப்போகும் பிலே ஆப் சுற்று வாய்ப்பு
மும்பை அணியின் வெற்றிக்கு இவர்கள் தான் காரணமா?