போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கடற்கரையில் ஆண் நண்பருடன் கைகோர்த்து செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
பாலிவுட்டின் இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் உடன் இருந்த அந்த ஆண் நண்பர் யார் என அறிந்து கொள்ள ஏகப்பட்ட பாலிவுட் ரசிகர்கள் இணையத்தை அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
கடற்கரையில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார் ஜான்வி கபூர்.
இந்திய திரையுலகையே தனது திறமையான நடிப்பால் ஆட்சி செய்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். தல அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வரும் போனி கபூருக்கும் ஸ்ரீதேவிக்கும் பிறந்த ஜான்வி கபூர் மராத்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த சைரத் படத்தின் இந்தி ரீமேக்கான தடக் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
கடற்கரையில் அந்தி மாலை நேரத்தில் நீச்சல் உடையில் தற்போது நடிகை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. மேலும், ஆண் நண்பர் ஒருவருடன் ஜான்வி கபூர் எடுத்த புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடற்கரையில் பிகினி உடையை அணிந்து கொண்டு ஆண் நண்பர் ஓர்ஹான் அவத்ரமணியின் கையை கோர்த்தபடி நடிகை ஜான்வி கபூர் ஓடும் புகைப்படம் தான் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது. பல பாலிவுட் பிரபலங்கள் முதல் ஜான்வி கபூரின் ரசிகர்கள் வரை இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.
பாலிவுட் நடிகைகளான சாரா அலி கான், அனன்யா பாண்டே, ஜான்வி கபூர் உள்ளிட்டோரின் நண்பராக மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார் ஓர்ஹான் அவத்ரமணி. முன்னதாக சாரா அலி கானின் காதலர் என வதந்திகள் கிளம்பிய நிலையில், தற்போது ஜான்வி கபூரும் இவரும் காதலித்து வருகிறார்களா? என்கிற சந்தேகம் கிளம்பி இருக்கிறது.
நடிகை சாரா அலி கானுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்த ஓர்ஹான் அடுத்ததாக சில காலம் நடிகை அனன்யா பாண்டேவுடன் நட்பு பாராட்டி வந்தார். பாலிவுட்டின் பிரபல நடிகர்களின் வாரிசுகளுடன் மட்டுமே பழகி வரும் இவர், லேட்டஸ்ட்டாக ஜான்வி கபூரின் கரம் கோர்த்து கடற்கரையில் ஆட்டம் போட்டதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் இருவரும் காதலிக்கிறார்களா? என்கிற கிசுகிசுக்களையும் சமூக வலைதளங்களில் கிளப்பி வருகின்றனர்.



மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா