வழக்கம் போல், கலைபுலி எஸ் தானு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ படத்தில் தாழ்த்தப்பட்ட மனிதரை சக்திவாய்ந்த முறையில் சித்தரித்ததற்காக தனுஷ் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றார். தனுஷின் தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளில் இதுவும் ஒன்று என்ற பெருமையையும் இந்த படம் பெற்று கொடுத்துள்ளது எனலாம்.

தனுஷுக்கு அடுத்தபடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அவரது மூத்த சகோதரி பத்மினியின் கதாபாத்திரத்தில் நடித்த லட்சுமி பிரியா சந்திரமௌலியின் நடிப்பு. இரு நடிகர்களுக்கும் இடையிலான தொடர்புகள் மிகவும் இயல்பானதாக அமைந்தது, அவர்கள் திரையில் உடன்பிறப்புகளாக எல்லோர் மனதிலும் எளிதில் பதிந்தனர் எனலாம்.
கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் சர்ஜுன் இயக்கிய ‘லட்சுமி’ குறும்படத்தின் மூலம் வலுவான நாடக பின்னணியைக் கொண்டிருந்த லட்சுமி பிரியா ரசிகர்களிடையே பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். வசந்த் இயக்கிய அவரது அடுத்த படமான ‘சிவரஞ்சினியம் இன்னும் சில பெண்களும்’ பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பாராட்டுக்களைப் பெற்றது.

லட்சுமி பிரியா சந்திரமௌலியின் மறுபக்கம் என்னவென்றால், அவர் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜ் இன் டீம்மேட் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா B அணிக்காக ஒரு தொடரில் விளையாடியுள்ளார். இது பலருக்கும் தெரிந்திராத விடயமாகும்.

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா