Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » தெலுங்கில் கிளம்பவுள்ள கர்ணன் – யார் ஹீரோ தெரியுமா?

தெலுங்கில் கிளம்பவுள்ள கர்ணன் – யார் ஹீரோ தெரியுமா?

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. வருகின்ற மே 8 ஆம் தேதி இந்த திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் கைப்பற்றியுள்ளார். படத்தில் ஹீரோவாக அவருடைய மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

karnan dhanush latest