அனல் பறக்கும் போட்டிகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி நடைபெற்ற 43வது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. ஆனால் அந்த போட்டியின் முடிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் ஆப்கானிஸ்தானின் இளம் வீரர் நவீன்-உல்-ஹக் நேருக்கு நேராக மோதிக் கொண்டதும் அதற்கு லக்னோ அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்ததும் மிகப்பெரிய சர்ச்சையாக மாறி ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியில் அமித் மிஸ்ரா, நவீன் உல்ஹக் ஆகியோர் விளையாடிக் கொண்டிருக்கும்போது, விராட் கோலி இந்த இருவருடனும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். அப்போதே, நவின் உல் ஹக்கும், கோலியும் முறைத்துக்கொண்டு நின்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இப்போட்டி முடிந்தப் பிறகு, கோலி ஆக்ரோஷமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து இரு அணி வீரர்களும் கைகொடுக்க வரிசையில் வந்தனர். அப்போது, கைல் மேயர்ஸ் கோலியிடம் நடந்த விஷயங்கள் குறித்து அதிருப்தியுடன் பேசிக்கொண்டே செய்தார். தொடர்ந்து, நவீன் உல்ஹக் கோலியிடம் கைகொடுக்கும்போது, அவரது கையை பிடித்துக்கொண்டே நவீன் கோபத்தோடு ஏதோ சொன்னார். இதனைத் தொடர்ந்து, நவின் உல் ஹக்கிற்கு ஆதரவாக கோலி பேச ஆரம்பித்தார்.
இதனால், களத்திலேயே கோலி, கம்பீர் இருவரும் ஆக்ஷரோமாக சண்டையிட ஆரம்பித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோலி, கம்பீர், நவீன் உல்ஹக் ஆகியோருக்கு பிசிசிஐ தண்டனை அறிவித்துள்ளது. கோலி, கம்பீர் இருவருக்கும், போட்டிக்கான 100 சதவீத தொகை அபராதமாகவும், நவீனுக்கு 50 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த போட்டியில் விராட் கோலி சம்பளமாக பெறும் 1.07 கோடிகளையும் அபராதமாக செலுத்த உள்ளார். அதே போல பயிற்சியாளராக இருந்து சண்டையை அமைதிப்படுத்த வேண்டிய கௌதம் கம்பீர் அதை விட்டு விட்டு விராட் கோலியுடன் சண்டையில் ஈடுபட்டதால் அவருக்கும் இப்போட்டியின் 100% சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் படி இப்போட்டியின் சம்பள தொகையான 25 லட்சத்தை கௌதம் கம்பீர் அபராதமாக செலுத்த உள்ளார். அதே போல் சீனியர் என்று பாராமல் விராட் கோலியுடன் மோதிய நவீனுக்கு இந்த போட்டியிலிருந்து 50% அதாவது 1.79 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த 3 பேருமே அதை ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை எதுவும் நடத்தப்படாது என்று ஐபிஎல் நிர்வாகம் கூறுகின்றது.
மேலதிகமாக
டெல்லி அணியின் பிலே ஆப் க்கு ஆப்பு வைத்தது CSK
சென்னை அணிக்கு கை நழுவிப்போகும் பிலே ஆப் சுற்று வாய்ப்பு
மும்பை அணியின் வெற்றிக்கு இவர்கள் தான் காரணமா?