Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » ரத்த வெள்ளத்தில் நிர்வாண போஸ் கொடுத்த நடிகை.. கமெண்ட் பண்ணிய ஷாருக்கான் மகள்!

ரத்த வெள்ளத்தில் நிர்வாண போஸ் கொடுத்த நடிகை.. கமெண்ட் பண்ணிய ஷாருக்கான் மகள்!

பிரபல ஹாலிவுட் டிவி நடிகையும் மாடல் அழகியுமான கைலி ஜென்னரின் நிர்வாண புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது. இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ள கைலி ஜென்னர் ரத்த வெள்ளத்தில் இருப்பது போல போஸ் கொடுத்திருப்பது பல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கைலி ஜென்னரின் இந்த போஸ்ட்டுக்கு கமெண்ட் செய்திருப்பதும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சர்வதேச மாடல் அழகியான கிம் கர்தாஷியனின் உறவுக்காரப் பெண் தான் கைலி ஜென்னர். கீப்பிங் அப் வித் கர்தாஷியன்ஸ் எனும் டிவி நிகழ்ச்சியில் இவரும் கர்தாஷியன் சகோதரிகளுடன் இணைந்து நடித்து பிரபலமானார். சர்வதேச மாடல் அழகியாக திகழும் இவரும் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

kylie jenner with baby

கிம் கர்தாஷினை போலவே இவருக்கும் இன்ஸ்டாகிராமில் 275 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். அதாவது சுமார் 27 கோடிக்கும் அதிகமானவர்கள் இவரது இன்ஸ்டாகிராமை பின் தொடர்ந்து வருகின்றனர். ஏகப்பட்ட இந்திய நடிகைகள் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் இவரது தீவிர ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாடகர் டிராவிஸ் ஸ்காட்டை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் இணைந்து 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்டார்மி வெப்ஸ்டர் எனும் பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். ஆனால், கடந்த 2019ம் ஆண்டு இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர். ஆனால், கொரோனா லாக்டவுனில் இருவரும் இணைந்து இருந்த நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் 24 வயதாகும் கைலி ஜென்னர். முன்னதாக டைகா என்பவரை 2014ல் திருமணம் செய்து 2017ல் விவாகரத்து செய்தார் கைலி ஜென்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

kylie jenner gold hot pic

கைலி காஸ்மெடிக்ஸ் எனும் அழகு சாதன நிறுவனத்தை நடத்தி கோடீஸ்வரியாகி உள்ள கைலி ஜென்னர் அதன் புதிய ஹாரர் வெர்ஷனை அறிமுகப்படுத்தும் விதமாக நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் கொடுத்த போஸ் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இரண்டாவது முறையாக கர்ப்பிணியாக இருக்கும் போது ஏன் இப்படி நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் இருப்பது போல போஸ் கொடுத்துருக்கீங்க.. பார்க்கவே பயங்கர அதிர்ச்சியாக உள்ளது. அழகு சாதன பொருளை அறிமுகம் செய்ய இப்படியா போட்டோஷூட் செய்வது என அக்கறையுடன் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

கைலி ஜென்னரின் பரம ரசிகையான ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கைலி ஜென்னரின் இந்த நிர்வாண போஸ்ட்டுக்கு லைக் செய்து தம்ப்ஸ் அப் கொடுத்துள்ளது பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

shahrukh-khan-daughter-suhana-khan-viral-photos

ஷாருக்கானின் மகனும் சுஹானா கானின் சகோதரனுமான ஆர்யான் கான் போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இன்ஸ்டாகிராமில் செம பிசியாக உள்ளாரே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்யவும் ஆரம்பித்துள்ளனர்.

kylie jenner hot