Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » இணையத்தில் லீக்கான நிதி அகர்வாலின் வைரல் புகைப்படம் – கோபத்தில் கடுப்பான நடிகை

இணையத்தில் லீக்கான நிதி அகர்வாலின் வைரல் புகைப்படம் – கோபத்தில் கடுப்பான நடிகை

தனது ரகசிய போட்டோக்கள் இணையத்தில் கசிந்ததால் பிரபல நடிகை கடும் கோபத்தில் உள்ளார். பிரபல நடிகை மற்றும் பாடகியாக வலம் வருபவர் நிதி அகர்வால். கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியில் வெளியான முன்னா மைக்கேல் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நிதி அகர்வால்.

தமிழில் ஈஸ்வரன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானர். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார்.

இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் நிதி அகர்வால் ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால், அவர் கோபமடைந்துள்ளார்.

nidhi agarwal latest pic

நடிகை நிதி அகர்வால் பள்ளியில் படித்தபோது நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் லீக்காகி உள்ளது. அவர் ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படங்களை யாரோ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இதனால் கோபமடைந்துள்ள நிதி அகர்வால், அந்த போட்டோக்களை ஷேர் செய்பவர்களை சமூக வலைதள பக்கத்தில் விளாசி வருகிறார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, “என்னுடைய குறிப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பகிரப்படுவதை பார்க்கிறேன். அந்த புகைப்படத்தை பகிர வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி உள்ளவர்கள் இந்த புகைப்படத்தை பகிரவே மாட்டார்கள். இது விரும்பத்தகாதது மற்றும் தேவையற்றது என சாடியுள்ளார்.

nidhi agarwal with bikini in school days
niddhiagarwal angry status