மொஹாலி: ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி தங்களது பழைய கெத்தான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தாங்கள் ஒரு ஆண்டை என்பதை நிரூபித்துவிட்டனர்.

கடந்த போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் வெற்றிக்கரமாக துரத்தினர். இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இந்த நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். பிரப்சிம்ரன் சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து தவானுடன் ஷார்ட் இணைந்தார். இதையடுத்து தவான் அதிரடி காரணமாக பஞ்சாப் அணி 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் சேர்த்தது.
ஷிகர் தவான் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி வீரர் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 82 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 27 பந்துகளில் 49 ரன்களும் விளாசினார். . குறிப்பாக ஆர்ச்சர் வீசிய 13வது ஓவரில் மட்டும் ஜித்தேஷ் சர்மா 4 பவுண்டரிகளை விளாசி அதிரடியை காட்டினார். அசத்தினார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.


இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். இதனையடுத்து கேமிரான் கிரீன் மற்றும் இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்தது. கேமிரான் கிரீன் 23 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார், இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி , பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்தனர். சூர்யகுமார் 31 பந்தில் 66 ரன்கள் விளாச, இஷான் கிஷன் 41 பந்தில் 75 ரன்கள் விளாசினார். கடைசி கட்டத்தில் இருவரும் ஆட்டமிழந்தாலும், திலக் வர்மா 3 சிக்சர்களை விளாசி 10 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் மும்பை அணி 18.5வது ஓவரில மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் மும்பை அணி 10 புள்ளிகளை பெற்று 6வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் மொத்தமாக 430 ரன்கள் குவிக்கப்பட்டது. இதன் மூலம் மும்பையில் பஞ்சாபபிடம் அடைந்த தோல்விக்கு தற்போது ரோகித் படை பழித் தீர்த்து கொண்டது.
மேலதிகமாக
டெல்லி அணியின் பிலே ஆப் க்கு ஆப்பு வைத்தது CSK
சென்னை அணிக்கு கை நழுவிப்போகும் பிலே ஆப் சுற்று வாய்ப்பு
சிறப்பாக பந்து வீசியும் சென்னையின் வெற்றி கை நழுவிப்போனது…