கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். கடந்த மே மாதம் லாக்டவுனுக்கு மத்தியிலும் மிகவும் எளிமையான முறையில் நித்தின் ராஜு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
ஹிந்தியில் ஹங்கம்மா 2டில் நடித்து வரும் ப்ரணிதா இப்பொழுது பஞ்சுமிட்டாய் கலரில் புட்ட பொம்மா டிரஸ்ஸில் செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ள வீடியோ ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து அறிமுகம் ஆன நடிகை ப்ரணிதா சுபாஷ் தமிழில் உதயம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர். அதைத் தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக சகுனி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். சகுனி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெற்று இருந்தாலும் ப்ரணிதாவுக்கு தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை.

கார்த்தியைத் தொடர்ந்து அவரது அண்ணன் சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ப்ரணிதா நடித்திருந்தார். பின் எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்கள் தமிழில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகின. இப்போதைக்கு தமிழில் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை என்றாலும் கன்னடம், ஹிந்தியில் மிக பிஸியாக நடித்து வருகிறார்.
ஹங்கமா முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் தயாராகி கொண்டிருக்கிறது. அதில் ஹீரோயினாக நடித்துவரும் ப்ரணிதா அதைத் தொடர்ந்து அஜய் தேவ்கானின் புஜ் படத்திலும் நடித்து வருகிறார். 1971ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரை மையப்படுத்தி தயாராகி வரும் புஜ் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு இன்றுவரை ரிலீசாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே படக்குழு இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
தமிழில் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டுமென ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இப்பொழுது பஞ்சு மிட்டாய் கலரில் புட்ட பொம்மா டிரஸ்ஸில் அழகு வடியும் மெழுகு சிலை போல சும்மா நச்சுன்னு வந்து நிற்கும் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் ப்ரணிதா பதிவிட்டதை அடுத்து ரசிகர்கள் பஞ்சு மிட்டாய் புட்ட பொம்மா என வர்ணித்து வருகின்றனர்.

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா