ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’. இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை டைரக்டர் வெற்றிமாறன் இன்று ட்விட்டரில் வெளியிட்டார். 2014 ல் வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். ஆனால் இந்த படத்திற்கும் பிசாசு படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என மிஷ்கின் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பிசாசு 2′ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்க உடன் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். விரைவில் இப்படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெற்றி மாறன் இன்று வெளியிட்டுள்ளார். இதில் பெண் ஒருவர் ஆடையின்றி, கால்கள் மட்டும் வெளியே தெரியும்படி, கையில் சிகரெட்டுடன் படுத்திருப்பது போன்ற அமைக்கப்பட்டுள்ளது. த்ரில்லர் படம் என்பதால் பேக்கிரவுண்ட் முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் அமைத்துள்ளனர்.

இந்த படத்தில் ஏற்கனவே ஆண்டிரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டது. ஒருவேளை அந்த சீனை தான் ஃபஸ்ட்லுக் போஸ்டரில் காட்டி உள்ளார்களா என தெரியவில்லை. ஆண்டிரியா நிர்வாண காட்சியில் நடிக்கும் சீனை படமாக்கும் போது செட்டில் மிக குறைந்த அளவிலான ஆட்களே அனுமதிக்கப்பட்டனராம். கதைக்கு தேவை என்பதால் நிர்வாணமாக நடிக்க ஒப்புக் கொண்டதாக ஆண்டிரியா தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஆடை படத்தில் அமலாபால் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்தார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளான போதிலும் அமலாபாலின் நடிப்பு பாராட்டை பெற்றது. ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த பிறகு அமலாபாலுக்கு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் போனது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இந்த படத்திற்கு பிறகு அமலாபால் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார்.
அமலாபால் நிர்வாணமாக நடித்தது எப்படி அந்த படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்ததோ, அதே போல், இந்த படத்திற்கும் விளம்பரமாக இருக்கும், தானும் கவனிக்கப்படும் நடிகையாகலாம் என ஆண்டிரியா நினைக்கிறாரோ என்னவோ. எப்படியோ த்ரில், கவர்ச்சி இரண்டும் கலந்ததாக இந்த படம் இருக்கும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.

மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா