பிரபல மாடலான நடிகை ரைசா வில்சன், பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். அதற்கு பின் துணை நடிகையாக சில படங்களில் நடித்த ரைசா, பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
தற்போது காதலிக்க யாருமில்லை, அலைஸ், எஃப்ஐஆர், ஹாஷ்டாக் லவ், தி சேஷ் போன்ற இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இதற்கிடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது படு கவர்ச்சியான ஃபோட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகிறார் ரைசா.

மாலத்தீவில் ஓய்விற்காக சென்ற ரைசா, அங்கு கடற்கரையில் இவர் நடத்திய கவர்ச்சி ஃபோட்டோஷூட் ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலாகின. தொடர்ந்து நீச்சல் குளத்தில் பிகினியில் தோன்றிய இவரது ஃபோட்டோக்கள், வீடியோக்களும் வைரலாகி, பரபரப்பை கிளப்பின.
இந்நிலையில் அலங்கோலமான முகத்துடன் இருக்கும் தனது ஃபோட்டோவை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரைசா. கண்கள் கருப்பாகி, முகம் வீங்கிய நிலையில் இருக்கும் அந்த ஃபோட்டோவுடன், ஃபேசியல் சிகிச்சைக்காக நேற்று டாக்டர் பைரவி செந்திலிடம் வந்தேன்.
எனக்கு தேவையில்லாத சிகிச்சை முறையை எடுத்துக் கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தினார். அதன் விளைவு தான் இது. இன்று என்னை சந்திக்கவோ, என்னுடன் பேசவோ அவர் மறுக்கிறார். ஆனால் அவரிடம் வேலை செய்பவர்களோ அவர் ஊரிலேயே இல்லை என்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார் ரைசா.
தற்போது இதற்காக ரைசா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரைசாவின் இந்த பதிவை கண்ட அவரது ரசிகர்கள், விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது போன்று யாரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இந்த ஃபோட்டோவையும், தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் பெயரையம் வெளியிட்டுள்ளதாக ரைசா தெரிவித்துள்ளார்.

மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா