தமிழ், தெலுங்கு, இந்தியில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் கன்னடத்தில் கில்லி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் அதற்கு பிறகு தெலுங்கில் தான் கொடி கட்டி பறக்கிறார். தமிழில் யுவன் படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் நுழைந்த ரகுல், தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரன் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், டைரக்டர் விஜய் இயக்கும் லேடீஸ் நைட், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கிலும் பிஸியான நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங் தான்.

இதில் லேட்டஸ்ட் தகவலாக, தமிழில் வெளிவந்த த்ரில்லர் படமான ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக்கிலும் ரகுல் நடிக்க உள்ளாராம். தமிழில் அமலாபால் நடித்த கேரக்டரில் தான் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார். ஹீரோவாக அக்ஷய் குமார் நடிக்க உள்ளார்.
சினிமாவில் மட்டுமல்ல இன்ஸ்டாகிராமிலும் பரபரப்பான நடிகையாக இருந்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். பொதுவாகவே இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் ஃபோட்டோக்கள், வீடியோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவியும். ஒவ்வொரு பதிவும் குறைந்தபட்சம் 2 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை பெறும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்நிலையில் சமீபத்தில் தரையில் ஒரு மார்க்கமாக அமர்ந்து போஸ் கொடுத்த ஃபோட்டோவை இவர் பகிர்ந்திருந்தார் இந்த ஃபோட்டோ 6 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று, நீச்சல் குளத்தில் மஞ்சள் நிற பிகினியில் அமர்ந்திருப்பது போன்ற ஃபோட்டோவை ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்துள்ளார்.
பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே இந்த ஃபோட்டோ 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. அனைத்து நடிகைகளுமே பிகினி ஃபோட்டோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாலும் ரகுல் ப்ரீத் சிங் பதிவுகளுக்கு மட்டும் எப்படி இவ்வளவு லைக்குகள் கிடைக்கிறது என மற்ற நடிகைகள் ஆடிப் போய் உள்ளனர்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ