இறுதிச்சுற்றில் நடித்து தமிழ் படங்களில் தனது முதல் சுற்றை ஆரம்பித்தவர் நடிகை ரித்திகா சிங். இப்பொழுது விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2ல் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவரது அடுத்தடுத்த படங்களைக் காண ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்க இப்பொழுது சேலையில் அடக்க ஒடுக்கமாக மனதை வருடும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.
நடிகை ரித்திகா சிங் முதல் படத்திலேயே தர லோக்கலுக்கு இறங்கிய சென்னை பாஷையில் பட்டையை கிளப்பி இறுதிச்சுற்று மூலம் தமிழ் சினிமாவில் தனது முதல் சுற்றை ஆரம்பிக்க இந்தப் படம் தெலுங்கில் குரு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் நடித்த தெலுங்கிலும் அறிமுகமானார். படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் குத்துச்சண்டை வீரராக உள்ள ரித்திகா இப்பொழுது காதல் கதைகளிலும் நடித்து வருகிறார்.
நடிகர் அசோக்செல்வன் நடித்து தயாரித்த ஓ மை கடவுளே சென்ற ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சிறுவயதிலிருந்து பழகும் ஒரு ஆண் மற்றும் பெண் நண்பர்களாகப் பழகி பின் இறுதியில் காதலர்களாக மாறுவதை வித்தியாசமான கோணத்தில் இப்போதுள்ள இளைஞர்களுக்கு பிடித்த வகையில் ஓ மை கடவுளே அமைந்திருக்க ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதில் ரித்திகா சிங் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அடுத்தடுத்து தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி வரும் ரித்திகா இப்பொழுது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பிச்சைக்காரன் 2ல் ஒப்பந்தமாகியுள்ளார். பிச்சைக்காரன் 2 முதலில் பாரம் பட இயக்குனர் பிரியங்கா கிருஷ்ணசுவாமி இயக்க இருந்தார். பின் அவர் விலக இப்பொழுது விஜய் ஆண்டனியே இயக்கி நடிப்பதற்கு முன் வந்துள்ளார்.
பெரும்பாலும் பேண்ட் சர்ட், மார்டன் டிரஸ் என அடாவடி பெண்ணாக வலைதளங்களில் சுற்றி வந்த ரித்திகா சிங் முதல் முறையாக அடக்க ஒடுக்கமான பெண்ணாக சேலையில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயைப் பிளந்து ரசித்து வருகின்றனர். ஸ்லீவ்லெஸ் புடவையில் இலை மறை காய் மறைவாக கவர்ச்சி காட்டிக்கொண்டு சேலையில் அம்சமாக பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் முன்னழகில் தஞ்சாவூரு பின்னழகில் தாஜ்மஹால் என வர்ணிக்கின்றனர். இப்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ