நடிகை சஞ்சிதா ஷெட்டி இப்பொழுது வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் மிக விரைவிலேயே ரிலீஸாக உள்ளது. பிரபுதேவா வித்தியாசமான சைக்கோ கதா பாத்திரத்தில் நடித்திருக்கும் பஹீரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் சஞ்சிதா செம ஸ்டைலிஷாக கெத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கதாநாயகியாக சஞ்சிதா பல திரைப்படங்களில் நடித்திருந்த போதும் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் இவருக்கு இன்றுவரை மிகப்பெரிய அடையாளமாக உள்ளது. இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான முதிர்ந்த கதாபாத்திரத்தில் கேங்க்ஸ்டர் லீடராக நடித்திருக்க இந்த திரைப்படம் வசூலை அள்ளியது. இதில் விஜய் சேதுபதியின் கண்களுக்கு மட்டும் தெரிகின்ற மாய கதாபாத்திரத்தில் சஞ்சிதா ஷெட்டி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எப்பொழுதும் பசங்க கூட மட்டுமே இணைந்து படங்களை எடுத்து வந்த இயக்குனர் வெங்கட்பிரபு இப்பொழுது கலர்ஃபுல்லாக பார்ட்டி என்ற படத்தை இயக்கி உள்ளார் . ஜெய், மிர்ச்சி சிவா, சந்திரன், ஷாம் ஆகியோர் லீட் கதாபாத்திரத்தில் நடித்து இருக்க சஞ்சிதா ஷெட்டி,நிவேதா பெத்துராஜ், ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா வித்தியாசமான சைக்கோ வேடத்தில் நடித்திருக்கும் பஹீரா திரைப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தை கலக்கியது.
தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் தனி இடத்தை பிடித்துள்ள சஞ்சிதா இப்பொழுது கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராகி கொண்டுள்ளார். இந்த நிலையில் இப்பொழுது ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறி கெத்தாக போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் மாஸ் காட்டி வருகிறது.



மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை