September 29, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » மனைவியுடன் ரொமான்ஸ் செய்த வேம்புலி – வைரல் போட்டோஸ்

மனைவியுடன் ரொமான்ஸ் செய்த வேம்புலி – வைரல் போட்டோஸ்

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக மிரட்டிய நடிகர் ஜான் கோக்கேன் தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்கள் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது. பிரபல தெலுங்கு நடிகர் ஜான் கோக்கேன். கேஜிஎஃப் சாப்டர் 1, வீரம், டியான், பாகுபலி தி பிகினிங், லக்ஷ்மணா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கேரக்டரில் நடித்திருந்தார் ஜான் கோக்கேன்.

வேம்புலியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பதாக தனது கதாப்பாத்திரத்தில் மிரட்டியுள்ளார் ஜான் கோக்கேன். நடை, உடை, பாவனை என அனைத்தும் பக்கா பாக்ஸராக பிரதிபலித்தது.

pooja kisses john

அடிக்கும் காட்சிகளிலும் சரி அடி வாங்கும் காட்சிகளிலும் சரி கொஞ்சமும் தனது நடிப்பில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை ஜான் கோக்கேன். அதற்கான பலனும் அவருக்கு கிடைத்துள்ளது.

அவரை பாராட்டி தள்ளுகின்றனர் ரசிகர்கள். வெற்றி களிப்பில் உள்ள நடிகர் ஜான் கோக்கேன், தற்போது ஓய்வில் உள்ளார். தனது மனைவி பூஜா ராமச்சந்திரனுடன் ரொமான்ஸ் செய்து வருகிறார் ஜான் கோக்கேன்.

இருவரும் அடிக்கடி ரொமான்டிக் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகின்றனர். யோகா, வொர்க் அவுட், ட்ரெடிஷ்னல் என கலக்கலாக போட்டோ ஷூட் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இருவரும் அந்த போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

john kokken with pooja

அந்த வகையில் தற்போது இருவரும் ஷேர் செய்துள்ள போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது. ஜிம் சூட்டில் உள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தப்படி போஸ் கொடுத்துள்ளார். தனது மனைவியான பூஜா ராமச்சந்திரனை மார்பில் தூக்கி வைத்தப்படி போஸ் கொடுத்துள்ளார் ஜான் கோக்கென்.

இருவரும் முத்தம் கொடுத்தப்படியும் அணைத்தப்படியும் போஸ் கொடுத்துள்ளனர். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், க்யூட், பியூட்டிஃபுல் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். நடிகை பூஜா ராமச்சந்திரன், பீஸா, காஞ்சனா 2, அந்தகாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாரர். இதேபோல் தெலுங்கிலும் ஏராமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

john kokken with pooja ramachandran
john kokken and pooja latest photo shoot