September 29, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » ஆற்றில் டூ பீஸுடன் ஆனந்தக்குளியல் போடும் ஸ்ரேயா சரண்

ஆற்றில் டூ பீஸுடன் ஆனந்தக்குளியல் போடும் ஸ்ரேயா சரண்

ரஜினிகாந்த் ,விஜய்,தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். பாகுபலி இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர் ஆர் ஆர் திரைப் படத்தில் இப்போது நடித்து வருகிறார். தமிழில் வரும் வாய்ப்புகளை தவறாமல் நடித்து வரும் ஸ்ரேயா சரண் இப்பொழுது ஆற்றில் பிகினி உடையில் ஆற அமர ஆனந்தக் குளியல் போட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

எனக்கு 20 உனக்கு 18,மழை, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமான ஸ்ரேயா சரண் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து முன்னணி நடிகையானார். தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் எக்கச்சக்கமான ஹிட் படங்களை கொடுத்து அங்கும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

shriya at boat

விஜய்யுடன் இணைந்து நடித்த அழகிய தமிழ் மகன் திரைப்படத்திற்கு பிறகு வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சென்றது இவரது மார்க்கெட்டுக்கு வேட்டு வைத்தது. இதைத்தொடர்ந்து தமிழில் நடித்த அனைத்து திரைப்படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

shriya saran in white

இந்த நிலையில் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார். பல்வேறு காரணங்களால் இப்படம் இன்னும் ரிலீசாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாகுபலி 2 பாகங்களைத் தொடர்ந்து இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி ஆர்ஆர்ஆர் படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இதில் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஸ்ரேயா இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அடிக்கடி கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட செம ரொமாண்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வந்த ஸ்ரேயா இப்பொழுது ஆற்றில் வெட்டவெளிச்சமாக பிகினி உடையில் ஆற அமர ஆனந்தக் குளியல் போட்டவாறு செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை சூடேற்றி வருகிறார்.

shriya saran bath at river