ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் நாயகி ஃப்ரீடா பின்டோ கர்ப்பமாக உள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார். மும்பையில் பிறந்து வளர்ந்த ஃப்ரீடா பின்டோ ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தால் தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
தனது காதலருடன் கடந்த 2019ம் ஆண்டு நிச்சயம் முடிந்த நிலையில், இன்னமும் அவருக்கு திருமணம் ஆகாதது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குநர் டேனி பாயல் இயக்கத்தில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்தது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளை அந்தப் படத்திற்கு இசையமைத்து தட்டித் தூக்கினார். தேவ் பட்டேல் மற்றும் நாயகி ஃப்ரீடா பின்டோ ஆகிய இருவரும் உலக பிரபலம் அடைந்தனர்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த ஃப்ரீடா பின்டோ தொடர்ந்து ஹாலிவுட் படங்கள், வெப் தொடர்கள் என நடித்து கலக்கி வருகிறார். இம்மார்டல்ஸ், ரைஸ் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ், லவ் சோனியா, மோக்ளி, லவ் மேரேஜ் என ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

அந்த பிரேக்கப்புக்கு பிறகு சாகச புகைப்படக் கலைஞர் கோரி டிரான் என்பவரை காதலித்து வந்த ஃப்ரீடா கடந்த 2019ம் ஆண்டு அவருடன் நிச்சயம் செய்துக் கொண்டார். நிச்சயம் செய்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ஃப்ரீடாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
நடிகை எமி ஜாக்சனை போலவே இவரும் திருமணம் ஆகாமலே கர்ப்பமாகி உள்ளார். தான் கர்ப்பமாகி உள்ள சந்தோஷ செய்தியை தனது காதலரின் பிறந்தநாள் சர்ப்ரைஸாக கூறியுள்ளார் ஃப்ரீடா பின்டோ. மேலும், கர்ப்பவதியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை ஃப்ரீடா பின்டோவுக்கும் அவரது காதலர் கோரி டிரானுக்கும் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை ஏகப்பட்ட பேர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ஃப்ரீடாவின் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் பல லட்ச லைக்குகளையும் அள்ளி வைரலாகி வருகிறது.

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா