2019ஆம் ஆண்டு வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தில் நடித்திருந்த சுனைனாவுக்கு எக்கச்சக்கமான பாராட்டுக்கள் குவிந்தது.
சினிமாவில் நம்பிக்கைக்குரிய இளம் நடிகையாக இருக்கும் நடிகை சுனைனா தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார். காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டவர். முதல் திரைப்படத்திலேயே பலரும் தயங்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
காதலில் விழுந்தேன் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை என தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து விருதுகளையும் பாராட்டுகளையும் தொடர்ந்து வென்று வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான தெறி, சமர், காளி, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி ஆந்தாலஜி திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்க இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு சுனைனாவின் நடிப்பும் கவனிக்கப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது.
கவர்ச்சி இல்லாத கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற சுனைனா இப்பொழுது இறுக்கமான கட்டையான உடையுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ப்ளாக் அண்ட் வைட் கண்ணு உன்ன பாத்தா கலரா மாறுதே என வர்ணித்த வர சிலர் முரட்டுத்தனமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ