Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » தளபதி விஜய் பாடலுக்கு சேலையில் குத்தாட்டம் போட்ட சூப்பர்ஸ்டார் மகள்

தளபதி விஜய் பாடலுக்கு சேலையில் குத்தாட்டம் போட்ட சூப்பர்ஸ்டார் மகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான படம் மாஸ்டர். இந்த படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடல் உலக ஃபேமஸ் ஆகி விட்டது. படம் ரிலீசாவதற்கு முன் இந்த பாடல் பல சாதனைகளை படைத்து, அனைவரின் மனதிலும் இடம்பிடித்து விட்டது. யூட்யூப்பில் இந்த பாடலை 200 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். படம் ரிலீசான 4 நாட்கள் கழித்து, அதாவது ஜனவரி 17 அன்று தான் வாத்தி கம்மிங் பாடல் யூட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அப்படி இருந்தும் இந்த பாடல் அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.

இதனை ட்விட்டரில், வாத்தி கம்மிங் என ஹேஷ்டேக் உருவாக்கி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலுக்கு ஆடாத பிரபலமே இல்லை என சொல்லும் அளவிற்கு பலரும் தோளை குலுக்கி ஆடி, அந்த வீடியோவை வைரலாக்கி விட்டனர்.

கடந்த ஆண்டின் மிக புகழ்பெற்ற பாடலாக மாறியது வாத்தி கம்மிங். இந்த பாடல் வெளியானது முதல் சோஷியல் மீடியாக்களில் பலரும் வாத்தி கம்மிங் சேலஞ்ச் என உருவாக்கி, தோளை குலுக்கிய ஸ்டெப்பை ஆடி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் லேட்டஸ்ட்டாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு, வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நடிகையும், தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு, சேலையில் தனது மகள் வித்யா நிர்வானா மஞ்சுவுடன் குத்தாட்டம் போட்டது இந்த வீடியோவை வைரலாக்கி உள்ளது.

சென்னையில் வளர்ந்தவரான லட்சுமி மஞ்சு, தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடித்துள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் பலருக்கும் நெருங்கிய தோழியாக இருந்து வருகிறார்.