நடிகை டாப்சியின் ஹாட் அவதாரில் உருவாகி உள்ள ஹசீன் தில்ருபா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி தீயாக பரவி வருகிறது. ஈராஸ் நிறுவனம் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் வினில் மேத்யூ இயக்கி உள்ளார். டாப்சி, விக்ராந்த் மசாய், ஹர்ஷவர்தன் ரானே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கிறது.
தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான டாப்சி கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான தப்பட் படம் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது.

இயக்குநர் வினில் மேத்யூ இயக்கத்தில் விக்ராந்த் மசாய் மற்றும் ஹர்ஷவர்தன் ரானே உள்ளிட்ட திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை டாப்சி. மர்ம த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நெட்பிளிக்ஸில் வரும் ஜூலை 2ம் தேதி வெளியாக உள்ள ஹசீன் தில்ருபா படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலரை தற்போது நெட்பிளிக்ஸ் இந்தியா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளது. ஒவ்வொரு ஃபிரேமிலும் டாப்சியின் ஹாட்டான நடிப்பு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளது.

கள்ளக் காதலில் ஈடுபட்டு இருக்கும் ஹசீன் தில்ருபாவின் கணவர் கொலை செய்யப்படுகிறார். கணவரை ஏன் கொலை செய்தீர்கள் என போலீசார் ஹசீன் தில்ருபாவை கைது செய்து விசாரிக்கின்றனர். உண்மையிலேயே டாப்சி தான் அந்த கொலையை செய்தாரா? இல்லை யார் டாப்சியின் கணவரை கொலை செய்தார் என்கிற பரபரப்பு நிறைந்த கதையாக இந்த படம் உருவாகி இருப்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.
இதுவரை இப்படியொரு செக்ஸியான கதாபாத்திரத்தில் நடிகை டாப்சி நடித்ததில்லை. இந்நிலையில், ஹசீன் தில்ருபா டிரைலர் முழுக்க ஆடை அவிழ்ப்பு, லிப் லாக் முத்தக் காட்சி, கதையிலேயே கள்ளக் காதல் என காட்சிக்கு காட்சி காமம் நிறைந்து காணப்படுகிறது.

ஹசீன் தில்ருபா படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த அடுத்த படங்களின் டப்பிங் உள்ளிட்ட பணிகளில் நடிகை டாப்சி இந்த லாக்டவுன் நேரத்திலும் பயங்கர பிசியாக பணியாற்றி வருகிறார். சபாஷ் மித்து, லூப் தேரா, ராஷ்மி ராக்கெட், விஜய்சேதுபதி உடன் தமிழில் ஒரு படம் என ஏகப்பட்ட படங்கள் டாப்சி கைவசம் உள்ளன.
மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ