September 22, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » மிரட்டலான பைக் ரேஸ், மாஸ் டைலாக்ஸ் – வெளியானது அஜித்தின் வலிமை கிலிம்ஸ்

மிரட்டலான பைக் ரேஸ், மாஸ் டைலாக்ஸ் – வெளியானது அஜித்தின் வலிமை கிலிம்ஸ்

ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாஸாக வெளியிடப்பட்டுள்ள Valimai Glimpse ஐ தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள். சாத்தானின் அடிமைகள் நாங்கள். இருள் வலை தான் எங்கள் உலகம். அதில் அத்துமீறி எவனாவது கால் வைத்தால்…என்ற வசனத்தின் முடிவில் அனல் பறக்கும் தீக்கு நடுவே அஜித் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். அர்ஜுன், நீ என் ஈகோவ தொட்டுட்ட. Get Ready for Game என முழங்குகிறார் வில்லன் கார்த்திகேயா.

இதைத் தொடர்ந்து பைக்கில் சீறி பாய்ந்து வரும் அஜித் கூலாக, நான் எப்பபோ கேம் ஆரம்பிச்சாச்சு தம்பி என்கிறார். அது மட்டுமல்ல பல அடுக்கு கட்டிடத்தின் ஒரு கட்டிடத்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு, மற்றொரு மாடிக்கு பைக்கிலேயே தாவுகிறார் அஜித். அது மற்றொரு சாதனையை முறியடிக்கும் என அஜித் கூறுவதாக இந்த டீசர் முடிகிறது.

இந்த டீசரை போனி கபூர் வெளியிட்ட 15 நிமிடங்களில் ஐந்தரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். வலிமை கிலிம்ஸ் இன்று ரிலீசாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால் காலை முதலே அஜித், தல, போனி கபூர், ஹச்.வினோத், வலிமை, வலிமை கிலிம்ஸ் போன்ற ஹாஷ்டாக்குகளை ட்விட்டரில் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.

வலிமை படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என போனி கபூர் இரண்டு நாட்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீசாகும் பொங்கலுக்கு தான் அஜித்தின் வலிமை படமும் ரிலீசாக உள்ளது. இதனால் தல – தளபதி ரசிகர்கள் இப்போதே மோதிக் கொள்ள துவங்கி விட்டனர்.

இதற்கு முன் வெளியிடப்பட்ட வலிமை ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், ஃபஸ்ட் சிங்கிள் ஆகியவற்றை தாண்டி தற்போது வெளியிடப்பட்டுள்ள வலிமை கிலிம்ஸ் புதிய சாதனையை எட்டும் என அனைவரும் கணித்துள்ளனர். ஏற்கனவே வலிமை ஃபஸ்ட் சிங்கிள் யூட்யூப்பில் 25 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.