நடிகர் விஜய் நடிக்கும் 65வது படத்திற்கு பீஸ்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65 வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் இப்படத்தில் கமிட்டாகியுள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் நடிக்கும் 65வது படத்திற்கு பீஸ்ட் (Beast) என பெயரிடப்பட்டுள்ளது.
Beast என்ற ஆங்கில சொல்லுக்கு தமிழில் மிருகம் என்று பொருள். படத்தின் பெயரே மிரட்டலாக உள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.
படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நடிகர் விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று தளபதி 65 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் டைட்டில் டார்கெட் ராஜா என்று இருக்கலாம் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் பீஸ்ட்தான் டைட்டில் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் உள்ளார் நடிகர் விஜய். மேலும் பின்னால் புகைக்குண்டு வீசப்பட்டு புகைந்து கொண்டிருக்கிறது. படத்தின் டைட்டில் மிரட்டலாக உள்ளதால் படம் சைகோ த்ரில்லராக இருக்குமோ என்று யூகித்து வருகின்றனர் ரசிகர்கள்.
நேற்று முதலே தளபதி 65 படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கவுன்டவுன் செய்து வந்தனர். சன் பிக்சர்ஸ் டிவிட்டர் பக்கத்திலும் எதிர்பார்ப்பை எகிற செய்யும் வகையில் ட்வீ ட்டி வந்தனர்.
தற்போது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் Mass என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் உள்ளார் நடிகர் விஜய். மேலும் பின்னால் புகைக்குண்டு வீசப்பட்டு புகைந்து கொண்டிருக்கிறது. படத்தின் டைட்டில் மிரட்டலாக உள்ளதால் படம் சைகோ த்ரில்லராக இருக்குமோ என்று யூகித்து வருகின்றனர் ரசிகர்கள்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ