பிக்பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. 100 நாட்களை கடந்து செல்லும் இந்நிகழ்ச்சியில் மக்களின் ஆதரவோடு 100 கடக்கும் போட்டியாளரே வெற்றியாளர் ஆவார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு 50 லட்சம் ரூபாய் பணமும் பிக்பாஸ் ட்ரோபியும் பரிசாக வழங்கப்படும். வழக்கமாக 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அடுத்தடுத்து வைல்டு கார்ட் என்ட்ரி என சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள். ஆனால் இம்முறை ஆரம்பத்திலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
அவர்கள் யார் என்ற மொத்த பட்டியலை பார்ப்போம்.. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக கானா பாடகியான இசைவானி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். இசைவானி வட சென்னையை சேர்ந்தவர் ஆவார். உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இசைவாணியை தேர்வு செய்து பெருமைப் படுத்தியது BBC. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக நடிகர் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த இவர் பிஎஸ்சி விஷ்வல் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார். இவர் முதல் சீரியல் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியல் ஆகும்.இதனை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ராஜு. பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற நடிகர் கவினின் நண்பரான ராஜு படங்களிலும் நடித்து வருகிறார்.

பிக்பாஸின் மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா பங்கேற்றுள்ளார். இலங்கை தமிழ் பெண்ணான மதுமிதா, பிறந்து வளர்ந்ததெல்லாம் ஜெர்மனியில்தான். ஜெர்மனியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மதுமிதாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட கால ஆசை. மாடலாகவும் பணி புரிந்து வரும் இவர் ஃபேஷன் டிசைனராகவும் உள்ளார். நடிப்புத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் மதுமிதா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது போட்டியாளராக யூடியூபர் அபிஷேக் ராஜா என்ட்ரி கொடுத்துள்ளார். Fully Filmy எனும் யூடியூப் சேனலில் விமர்சகராக இருந்து பிரபலமான இவர், அதன் பிறகு ஓப்பன் பண்ணா எனும் யூடியூப் சேனலை தொடங்கி தமிழ் சினிமா விமர்சனங்களை கூறி வந்தார். மேலும், பல பிரபலங்களை பேட்டி எடுத்தும் பிரபலமானவர் அபிஷேக் ராஜா. இமைக்கா நொடிகள் படத்தில் ராஷி கன்னாவின் பாய் பெஸ்டியாக நடித்தவர்தான் இந்த அபிஷேக் ராஜா.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது போட்டியாளராக பங்கேற்றவர் திருநங்கை நமிதா மாரிமுத்து. தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை போட்டியாளராக நமிதா பங்கேற்றுள்ளார். சென்னையை திருநங்கை மாடல் அழகி நமிதா மாரிமுத்து பல்வேறு அழகிப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் இந்த ஆறடி உயர அழகி.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது போட்டியாளராக வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தவர் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே. பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது போட்டியாளராக நடிகர் அபினய் வட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அபினய் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் ஆவார். இவர் நடிகர், விவசாயி, டென்னிஸ் பிளேயர் என பல முகங்களை கொண்டுள்ளார். தமிழில் ராமானுஜம், சென்னை28 2, விளம்பரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது போட்டியாளராக சீரியல் நடிகை பாவனி ரெட்டி பங்கேற்றுள்ளார். பாவனி ரெட்டி பிரபல மாடலாகவும் நடிகையுமாக வலம் வருகிறார். தெலுங்கு தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள நடிகை பாவனி ரெட்டி தமிழ் தொலைக்காட்சிகளிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாசமலர், விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியலிலும் நடித்துள்ளார். மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பாவனி ரெட்டி.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 9வது போட்டியாளராக நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு பங்கேற்றுள்ளார். நாட்டுப்புற இசைக்கலைஞரான சின்ன பொண்ணு, சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். தனது 13வது வயதில் கோயில்களிலும் தேவாலயங்களிலும் தன்னுடைய தனித்துவமான குரலால் மக்களின் மனங்களை வென்றார்.பல மேடை நிகழ்ச்சிகளிலும் ,கோவில் திருவிழாக்களிலும் சின்ன பொண்ணுவின் பாடலே ஒலித்தது. சினிமாவிலும் பாடி வருகிறார் சின்ன பொண்ணு. ராஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் இவர் பாடிய வாழ்த்துறேன் வாழ்த்துறேன் பாடல் மற்றும் காதலில் விழுந்தேன் படத்தில் இவர் பாடிய நாக்க முக்கா பாடல் ஆகியவை பெரும் பிரபலம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது போட்டியாளராக மலேசியாவை சேர்ந்த பிரபல டிக் டாக் கலைஞர் நதியா சங் பங்கேற்றுள்ளார். மூன்று குழந்தைகளுக்கு தாயான நதியா சங், முன்னாள் மாடலாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நதியா சங் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11வது போட்டியாளராக நடிகர் வருண் பங்கேற்றார். நடிகர் ஐசரி வேலனின் பேரனும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மருமகனும் ஆவார் வருண். ஏ.எல் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ள இவர், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜோஷ்வா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது போட்டியாளராக தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகருமான இமான் அண்ணாச்சி பங்கேற்றுள்ளார். பல்வேறு தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ள இமான் அண்ணாச்சி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது போட்டியாளராக, மாடல் அழகி சுருதி ஜெயதேவன் பங்கேற்றுள்ளார். இவர் ஒரு பேஸ்கெட் பால் வீராங்கனை ஆவார். சென்னையில் பிறந்து வளர்ந்த அக்ஷரா ரெட்டி 2019ம் ஆண்டு இந்தியளவிலான மிஸ் சூப்பர் குளோப் மற்றும் உலகளவிலான மிஸ் சூப்பர் குளோப் அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். காசு மேல காசு எனும் மலேசிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள இவர், ஹேப்பி நியூ இயர் எனும் தமிழ் குறும்படத்திலும் நடித்துள்ளார். சினிமா, சின்னத்திரை, மாடலிங் என கலக்கிய அக்ஷரா ரெட்டி தற்போது பாக்ஸிங் பயிற்சியை தீவிரமாக கற்றுக் கொண்டு வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15வது போட்டியாளராக பங்கேற்றிருப்பவர் ஐக்கி பெர்ரி. தமிழ் ராப்பரான ஐக்கி பெர்ரி ஒரு மருத்துவரும் ஆவார். தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட ஐக்கி பெர்ரி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த 2018ல் ஐபோன் காதலி எனும் குறும்படத்தில் நடித்து சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நாடக கலைஞர் தாமரை செல்வி பங்கேற்றுள்ளார். நாடகக் கலைஞரான தாமரை செல்வி, தெருக்கூத்து நாடகங்களில் வள்ளி திருக்கல்யாணம் உள்ளிட்ட நாடகங்களின் ராஜபார்ட் நடிகர்கள் நடிப்பதற்கு முன்பாக காமெடி செய்யும் கலைஞராக நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 வது போட்டியாளராக நடிகர் சிபி சந்திரன் நுழைந்துள்ளார். நடிகர் சிபிசந்திரன், 2018ம் ஆண்டு வெளியான வஞ்சகர் உலகம் என்ற திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார். அந்த திரைப்படத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அடுத்து, சிபி சந்திரன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் மாணவனான நடித்திருப்பார். அந்த திரைப்படத்தை அடுத்து தற்போது இவர், பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா