தல ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அந்த நாள் வரப் போகிறது. ஆம், வரும் ஜூலை 15ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரிலீசாகப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்தோஷ தருணத்தை தல ரசிகர்கள் #வலிமைதிருவிழா எனும் ஹாஷ்டேக்கை போட்டு தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூலை 15ம் தேதி வெளியாகும் என உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை ஹாஷ்டேக் போட்டு தல ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜூலை 15 முதல் வலிமை படம் குறித்த அப்டேட்களாக அடுக்கி அஜித் ரசிகர்களை இதுவரை காத்திருந்ததையே மறக்கும் அளவுக்கு அவர்களை திணறடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆரம்பிக்கலாமா!
வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானால் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து ஃபர்ஸ்ட் லுக்கின் சாதனைகளையும் அது முறியடிக்கும் என அஜித் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டு சொல்லி வருகின்றனர். ஜூலை 15ம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தல அஜித்தின் மரணத்தனமான பைக் ஸ்டண்ட், யுவன் சங்கர் ராஜாவின் மஜாவான பிஜிஎம் என இரண்டும் கலந்து வெளியாகவுள்ள வலிமை படத்தால் தியேட்டர்கள் இப்படித் தான் பற்றி எரியும் என ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாமல் ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
இனிமேல் உலக அரங்கில் வலிமை அப்டேட்டை கேட்டு அதகளம் பண்ண வேண்டிய அவசியம் அஜித் ரசிகர்களுக்கு இருக்காது என்றும், அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு வலிமை படம் உருவாகி வருகிறது என்றும் கூறப்படுகிறது. நிச்சயம் இந்த தீபாவளி தல தீபாவளியாகத்தான் இருக்கப் போகிறது.
மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ