பிரேமம் படத்தில் மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்தவர் குறித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்துள்ளார் இயக்குர் அல்போன்ஸ் புத்திரன். கடந்த 2015ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான படம் பிரேமம். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் குவித்தது.
இந்நிலையில் படத்தின் இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன், சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் உரையாற்றினார். அப்போது பிரேமம் படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றையும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அசினைதான் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இதற்கு நிவின் பாலியும் ஒப்புக்கொண்டாராம். ஆனால் அசினை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
அல்போன்ஸ் புத்திரனும் நிவின் பாலியும் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் அசினை பிடிக்க முடியவில்லையாம். அதன்பிறகே அந்த கதாப்பாத்திரத்திற்கு நடிகை சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்தார்களாம்.
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சிறு வயதில் ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில்தான் படித்தாராம். அதோடு கல்லூரி படிப்பை சென்னையில் தான் படித்தாராம். அதனால் தமிழ் நன்கு அறிந்தவராகவும் உள்ளார்.
அல்போன்ஸ் புத்திரன் தற்போது பாட்டு என்ற படத்தி இயக்குகிறார். இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார். இந்தப் படத்தில் ஃபகத் பாசில் மற்றும் நயன்தாரா லீடிங் ரோலில் நடிக்கின்றனர். அல்போன் தனக்கு ரஜினிக்காந்தை இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருப்பதாக அண்மையில் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ