September 22, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » தல அஜித்திற்கு வில்லனாக நடிப்பீங்களா? விஜய் சேதுபதி சொன்ன பகீர் பதில்

தல அஜித்திற்கு வில்லனாக நடிப்பீங்களா? விஜய் சேதுபதி சொன்ன பகீர் பதில்

வில்லனாக நடித்த நடிகர்கள் ஹீரோக்களாக மாற ஆசைப்படுவது வழக்கம். ஆனால், நம்ம விஜய்சேதுபதி விஷயத்தில் அப்படி இல்லை. நல்ல கதாபாத்திரம் அமைந்தால் போதும், மனுஷன் இறங்கி நடிப்பார். விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு எதிர் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய விஜய்சேதுபதி தொடர்ந்து ரஜினி, விஜய், கமல் என பலருடன் இணைந்து நெகட்டிவ் ரோலில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.

அசோக் செல்வன் படத்தில் ஒரு கேமியோ ரோல் என்றாலும் ஆஜராகும் விஜய்சேதுபதி அடுத்ததாக தல அஜித்துக்கு ஆப்போசிட்டாக நடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வாரிசு நடிகராக ஒன்றும் விஜய்சேதுபதி சினிமாவுக்குள் வரவில்லை. புதுப்பேட்டை, நான் மகான் இல்லை போன்ற படங்களில் துணை நடிகராக நடித்து குறும்படங்களில் நடித்து படிப்படியாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதால் தான் மக்கள் செல்வனாக விஜய்சேதுபதி கொண்டாடப்படுகிறார்.

கமர்ஷியல் ஹீரோவாக நடித்து விட்டு கலெக்‌ஷனை அள்ளி செல்ல வேண்டும் என விஜய்சேதுபதி ஒரு போதும் நினைக்கவில்லை. ஒரு கோடி சம்பளம் கிடைத்ததும் இனி சம்பாதித்தது போதும் பிடித்த நடிப்பை பிடித்த படி நடித்து விட்டு போவோம் என நினைத்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

டாப் ஹீரோவாக ஆகிவிட்டால் அந்த மீட்டரில் இருந்து பலரும் இறங்கி நடிக்க பயப்படுவார்கள். ஆனால், நடிகர் விஜய்சேதுபதிக்கு அப்படி எந்தவொரு பயமும் கிடையாது. அதனால் தான் எளிதில் நெகட்டிவ் ரோல்களை ஏற்று நடிக்க அவரால் முடிகிறது. நெகட்டிவ் ரோல் என வந்து விட்டால் நம்ம ஏரியா என இன்னும் ஒரு ஸ்பூன் எக்ஸ்ட்ராவாக புகுந்து விளையாடுகிறார்.

vijay sethupathi in master

நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதிலும் ஹீரோவாகவே கெத்துக் காட்டுகிறார் விஜய்சேதுபதி. விக்ரம் வேதா தொடங்கி தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரை நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் தனது அசால்ட்டான நடிப்பு திறமையால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விடுகிறார்.

vijay sethupathi in petta

ராமாயணத்தில் வரும் வாலி போல எதிரில் நிற்பவர் சூப்பர்ஸ்டாராகவே இருந்தாலும் அவரது பலத்தில் பாதியை தனது பலமாக ஈர்த்துக் கொள்ளும் திறமை நடிகர் விஜய்சேதுபதிக்கு உள்ளது. இதனை பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்தே கூறியிருப்பார்.

vijay sethupathi in vikram movie

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் உலக நாயகன் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் இணைந்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. விக்ரம் படத்தில் நடிக்கும் மூவருமே ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கியவர்கள் என்பதால் வேற லெவல் திரை விருந்து காத்திருக்கிறது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

thala ajith in valimai

மாதவன், ரஜினிகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நெகட்டிவ் ரோலில் நடித்து அட்டகாசம் பண்ணி வரும் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என கலக்கி வருகிறார். தல அஜித்தின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் குவிந்து வருகிறது.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தனது ஸ்டைலில் தொகுத்து வழங்க தயாராகி வரும் விஜய்சேதுபதியிடமே நேரடியாக இதுதொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய்சேதுபதி தனக்கு எந்தவொரு ஈகோவும் கிடையாது. தல அஜித்துடன் ஒரு படம் என்ன பத்து படத்தில் கூட வில்லனாக நடிகக் ரெடி என்று சொல்லிவிட்டார்.